இடுகைகள்

எர்ணாக்குளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!

படம்
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம். எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல

ரோஷினி - வட இந்திய மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி- கேரளச்சாதனை!

படம்
எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு கல்வி! இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி! கேரள அரசு, அரசுப்பள்ளிகளில் வட இந்திய  மாணவர்களுக்கு,  அவர்களது தாய்மொழியையும், அதன்வழியாக மலையாள மொழியையும் கற்றுத்தருகிறது. கேரள அரசு, ரோஷினி என்ற திட்டத்தை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயற்படுத்தி வருகிறது. இதன்நோக்கம், பிறமொழி மாணவர்களுக்கு தத்தமது தாய்மொழி மற்றும் மலையாளத்தைக் கற்பிப்பது ஆகும்.  நாற்பது தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு, 38 பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளத்தில் 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேற்கு வங்காளம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%), உ.பி (17.28%) ஆகிய அளவுகளில் வட இந்தியர்கள் வாழ்கின்றனர். மலையாளத்தைப் புரிந்துகொண்டால் பணியாற்றுவது எளிது என்ற முயற்சியில் அரசு, ரோஷினி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தன்னார்வலர்களான ஆசிரியர்கள்  2017ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் அறிமுகமான திட்டத்தால், 48 சதவீத அளவுக்கு மாணவர்களின் இடைநிற்றல் அளவு குறைந்திருக்கிறது. கேரள அரசு, வட இந்தியர்களால் பொருளாதார பலம் பெற்றிருக்கி