பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது.
ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம்.
எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல்லை. தற்போது, ஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது மாணவிகளுக்கு உதவியாக உள்ளது அவர்களின் முகத்திலேயே தெரிகிறது. இதன்மூலம் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் போட்டியிடத்தொடங்கியுள்ளனர்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட பள்ளிகளிலும் உடை பற்றிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. எர்ணாக்குளம் தொடக்கப்பள்ளி யோசனைகளை பெற்றோர்கள் முன்வைத்தது முக்கியமானது. முதலில் மாணவிகள் அணிந்த ஆடை, அது பற்றி கவனத்தை மனதில் இருத்தியது. இதனால் விளையாடுவது, உட்காருவது அனைத்திலும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது இருந்தது. எனவே பெற்றார் சொன்ன யோசனையை நாங்கள் பின்பற்றி, இப்போது உடைகளை மாற்றியுள்ளோம் என்கிறார் பள்ளி தலைமையாசிரியை சி.ராஜி.
நன்றி- டைம்ஸ் ஆப் இந்தியா - சோபிதா தார் - அனந்த நாராயணன்