5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?



Image result for 5g





இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம்.


இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம்.

தொழில்வளர்ச்சி விர்......

5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.

தொலைத்தொடர்பு சிறப்பு!

ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும்.

ஸ்மார்ட் வகுப்பறை!

அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவே ஆசிரியர் எங்கிருந்தாலும் உங்களுக்கு பாடம் எடுக்க முடியும். இதனால் புதிய விஷயங்களை நேர்த்தியாக வேகமாக தெரிந்துகொள்ள முடியும்.


தானியங்கி வாகனங்கள்.

பின்னே, ஸ்மார்ட் சிட்டிகளில் ஆல்டோ 800 ஆ.. ஓடும். அனைத்தும் ஸ்மார்ட் வாகனங்கள்தான். எனவே, கைதட்டி கூப்பிட்டு வண்டி பிடிக்க முடியாது. அனைத்தும் ஆப் வழியாகத்தான் நடந்தாகவேண்டும். குறிப்பாக டிரைவர்கள் இருக்க மாட்டார்கள். கணினிக்கு கூறிய வழித்தட புக்கிங்கில் செல்ல வேண்டியதுதான். சென்றவுடன் ஆப்பில் தகவல் கொடுத்தால் கணினி புரிந்துகொள்ளும். அவ்வளவே. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது. தகவல்தொடர்பு முழுக்க கணினி மயமாக டிஜிட்டலாகத்தான் நடைபெறும்  என்பதைத்தான்.

கெபாசிட்டி மிரட்டல்!

பிசி நேரத்தில் போன்களே கூட அப்புறம் போன் பண்ணுங்களேன் என்று கெஞ்சும். ஆனால் 5 ஜி சேவை, பிசியான நேரங்களில் கூட பத்து லட்சம் சாதனங்களை எளிதாக இணைக்கும். எனவே எப்போதும் 5ஜியோடு இணைந்திருக்க முடியும். மஜாவாக படங்களைப் பார்க்க முடியும்.

லோடிங் பிரச்னை கிடையாது!

இணையத்தில் பலரும் கண் சிவப்பது யூடியூப் முதற்கொண்டு பிரேசர்ஸ்.காம் வரை இணைய வீடியோக்கள் தொங்குவதுதான். ஹாத்வே விளம்பரம் அளவுக்கு வேகமாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் இணைய வீடியோக்களை லோடிங் லோகோ வராமல் பர்த்து மகிழலாம்.

டவுன்லோடு ஆசம்!

கண்ணில் பார்ப்பதையெல்லாம் நொடியில் டவுன்லோடு செய்யலாம். அதற்காகத்தான் 5ஜி உதவுகிறது. பெரும்பாலும் இணையம் தொங்காமல் வீடியோ வந்தால் டவுன்லோடு நேசர்கள் குறைவார்கள்.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்







பிரபலமான இடுகைகள்