இடுகைகள்

குறுங்காடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

படம்
  நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார்.  மண்ணுக்கு சொந்த