இடுகைகள்

நாசா ஐஸ்சாட்2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனிக்கட்டிகளை ஆராயும் நாசா!

படம்
பனிக்கட்டிகளில் ஆய்வு! நாசா விரைவில் செலுத்தவிருக்கும் ஐஸ்சாட்-2, பூமியிலுள்ள பனிக்கட்டிகளை கண்காணித்து தகவல்களை தரவிருக்கிறது. “டோபோகிராபிக் லேசர் சிஸ்டம் துல்லியமாக ஐஸ்கட்டிகள், மேகம், நிலம் ஆகியவற்றை படம் எடுத்து தகவல்களை அனுப்பும். இத்தகவல்கள் பூமியைப் பற்றி மேலும் ஆழமாக தெரிந்துகொள்ள உதவும்” என்கிறார் ஆராய்ச்சியாளர் தோர்ஸ்டன் மார்க்கஸ். கிரீன்லாந்து, அன்டார்டிகாவிலுள்ள பனிக்கட்டிகளின் அளவை லேசர் ஒளிக்கதிர்கள் துல்லியமாக கணித்து, நொடிக்கு 60 ஆயிரம் அளவீடுகளை பதிவு செய்யும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். வெப்பமயமாதல் மூலம் உருகும் பனிக்கட்டிகளின அளவை இதன்மூலம் எளிதாக கணித்து கடல்மட்ட உயர்வை கண்டறியலாம். “இம்முறையில் எதிர்காலத்தில் கடல்மட்டும் உயருவதை எளிதாக கண்டுபிடித்து அதற்கான திட்டமிடல்களை செய்யலாம்” கடல் ஆய்வுக்கான ஸ்கிரிப்ஸ் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹெலன் ஃபிரிக்கர்.