நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையைத் துப்புதுலக்கும் போக்குவரத்து அதிகாரி
கபடதாரி தெலுங்கு இயக்கம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இசை சைமன் கே கிங் மூலம் - கன்னடப்படம் காவலுதாரி நடிப்பு சுமந்த், நந்திதா சுவேதா குற்றத்தை துப்பறியும் சாகச திரைப்படம். கதை, 1975 தொடங்கி 2019 வரை இரு காலகட்டங்களில் நடைபெறுகிறது. போக்குவரத்துதுறை துணை ஆய்வாளர், குற்றப் பிரிவுக்கு மாற முயல்கிறார். ஆனால் எழுத்து தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற முடியாத சூழ்நிலை. தன்னை நிரூபிக்க வழக்கு ஒன்றைத் தேடுகிறார். அப்படி கிடைத்த வழக்கு அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. சில உயிர்பலிகளும் நடக்கிறது. எடுத்த லட்சியத்தை நாயகன் முடித்தாரா இல்லையா என்பதே கதை. படத்தில் நாயகதுதி, நாயகிக்கான பாடல், காதல் காட்சிகள், குத்துப்பாடல் என தெலுங்கு படத்தின் அத்தியாவசிய அம்சங்கள் ஏதுமில்லை. படத்தில் அனைத்து காட்சிகளுமே குறியீடுகளாக உள்ளன. ஆனால் ஒரு பார்வையாளராக அதை பெரிதுபடுத்தவேண்டியதில்லை. கதையை மட்டும் கவனித்தால் போதும். குறியீடுகளை அறிய யூட்யூபில் தேடினால் பதில்கள் கிடைக்கும். அகழாய்வு நடைபெறும் இடத்தில் ஆண், பெண், சிறுமி என மூன்று நபர்களின் எலும்புக் கூடுகள்...