இடுகைகள்

பிறந்தநாள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதி சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஆறு மாணவர்களின் வீரச்செயல்! - 7 டேஸ் வார்- அனிமேஷன்

படம்
    7 டேஸ் வார்!   7 டேஸ் வார்! ஜப்பான் அனிமே மாமோரு கானுக்கு, தன்னுடைய வகுப்பில் கூடவே படிக்கும் தோழி மீது காதல். ஆனால் அதனை நேரடியாக சொல்ல துணிச்சல் இல்லை. நிறைய படிப்பவன். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவன். ஆனால் அவன் சொல்வதை காதுகொடுத்து கேட்க கூட அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. இந்த நிலையில் அவனது பள்ளித்தோழி கான் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவளின் பிறந்த நாளும் வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவளை இம்ப்ரெஸ் செய்ய கான் முயல்கிறான். இதற்காக பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை ஒன்றுக்கு ஜாலியாக செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு தோழியின் நண்பர்கள் அனைவருமே வருகிறார்கள். ஒரே வகுப்பில் இருந்தாலும் கூட அதிகம் பேசிப்பழகாத ஆட்கள். அங்கு வாழும் தாய்லாந்து சிறுவன், பெற்றோரை தவறவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அவனைப் பிடிக்க ஜப்பான் குடியுரிமைத்துறை முயற்சிக்கிறது. கான் தலைமையில் அவனது நண்பர்கள் ஒன்று திரண்டு அந்த தொழிற்சாலையில் அச்சிறுவனைக் காக்க முயல்கிறார்கள். இது தேசிய அளவில் செய்தியாக, அச்சிறுவனின் பெற்றோர் கிடைத்தார்களா

பரிசு தரும்போது குழப்பம் ஏற்படுகிறதா?

படம்
மிஸ்டர் ரோனி பிறருக்கு பிறந்தநாள், திருமணம் என வரும்போது பரிசுகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் திணறுகிறேன். ஏன் இப்படி? எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் கல்யாணத்திற்கு ரெடியானார். அவர் பத்திரிகை வைக்கும்போதே அலுவலக சகா, நான் திருமணத்திற்கு வர முடியாது என்று சொன்னார். சொல்லிவிட்டு உடனே இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து நீட்டிவிட்டார். அதை எதிர்பாரக்க நண்பர், சட்டென முகம் சுருங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு பரிசை ஏற்றுக்கொண்டார். இங்கு இரண்டு விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று திருமணம் செய்பவருக்கும் பரிசளித்த நண்பருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இரண்டு, திருமணம் நடந்து முடிந்த பிறகு கூட அவர் இன்டக்ஷன் ஸ்டவ்வைத் தந்திருக்கலாம். உடனடியாக பரிசு தந்து  அதன் வழியாக நான் வரவில்லை என்பது நாகரிகமான முறை அல்ல. உங்களுக்கு நேருவதும் இதுதான். நீங்கள் பரிசளிக்கப் போகிறவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால எளிதாக பரிசைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், அமேசானில் விஷ் லிஸ்ட் என எதைத்தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் என பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் கஷ்டம்தான

பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! ஹேப்பி பர்த்டே டூ யூ! பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது. அதுபற்றிய  தகவல்கள்: 1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது. 1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்கு ட