இடுகைகள்

தென்கொரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட

குருவுக்குத் துரோகம் செய்த நான்கு சீடர்களைக் கொல்வதற்கு முயலும் சிறுவனின் பயணம்!

படம்
  கோசு மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காபேட்.காம் தற்காப்புக்கலையில் வித்தகரான குருவை அவரது நான்கு சீடர்கள் துரோகம் செய்து வீழ்த்துகிறார்கள். சண்டையில் குற்றுயிரான குரு எப்படியோ உயிர்பிழைத்து குகையில் வாழ்கிறார்.ஒரு சிறுவனை தனது சீடனாக்கி, தனது தற்காப்புக்கலைகளை சொல்லித்தருகிறார். இறக்கும்போது அவர் கேட்கும் வாக்குறுதி, எனது முன்னாள் மாணவர்கள் நால்வரையும் அழிக்கவேண்டும் என்பதுதான். அதை கேயங் என்ற சீடனும் ஏற்கிறான். அவனால் நான்கு மூத்த தற்காப்புக் கலை வல்லுநர்களை வீழ்த்த முடிந்ததா என்பதே கதை.  கோசு என்றால் தற்காப்புக்கலை வல்லுநர் என்று பொருள். இந்த காமிக்ஸில் அதிக வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரேமுக்கு பிரேம் தகவல்கள் துல்லியமாக உள்ளன. பழுப்பு,நீலமும் கலந்தது போலவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது காமிக்ஸ் படிக்கும்போது புதுவித அனுபவத்தைத் தருகிறது.  பொதுவாக தற்காப்புக்கலை சார்ந்த காமிக்ஸில் நாயகன் கட்டுடல் காளையாக இருப்பான். இந்த கதையில் டம்ளிங்கை விரும்பிச் சாப்பிடுகிற தொந்திச் சிறுவனாக கேயங் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் அவனோடு சண்டை போடும் யாவருமே எளிதாக ஏமாறுகிறார்கள்

அரசரைக் கொல்ல தற்கொலைப்படை திட்டம் - தி ஃபேட்டல் என்கவுண்டர்!

படம்
தி ஃபேட்டல் என்கவுன்டர் - தென்கொரியா 2014 இயக்கம் - லீ ஜே க்யூ ஒளிப்பதிவு - கோ நாக் சியோன் இசை மோவிக் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவை படுகொலை செய்ய நோரன் எனும் கொலைகாரப்படை திட்டமிடுகிறது. இதற்காக, அவர்கள் செய்யும் முயற்சியும், உள்ளுக்குள் அரசருக்கு நெருக்கமான உறவுகளின் அதிகாரப்போட்டியும்தான் படம். படத்தின் காட்சிகள் முன்பின்னாக நகர்கின்றன. ஒரு காட்சி முடிந்தபின், அதற்கு 45 நிமிடங்கள் முன்னதாக என மாறி மாறி நகர்வது ஒரு கட்டத்தில் இயக்குநர் நம்மை பரிசோதனை எலியாக மாற்றுகிறாரோ என்று தோன்றுகிறது. தொடக்க காட்சியில் அரசு படைவீரர்கள் விழுந்து கிடக்க, அறை உள்ளேயிருந்து தீனமான அலறல் கேட்க காட்சி மாறுகிறது. உண்மையில் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவின் வாழ்க்கையை தழுவியது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டுவரை இவரது ஜோசியன் வம்சம் தென்கொரியாவை ஆண்டது. துரதிர்ஷ்டமான மன்னர் என்று வரலாற்றில் இவர் அழைக்கப்படுகிறார். காரணம், இவர் மன்னரான சமயம் இவரது குடும்பத்தில் நேர்ந்த அநீதியான மரணங்கள்தான். அதற்கு இவர்களின் ரத்த வழி உறவுகளை காரணமாக இருக்கின்றன. தற்கொலைப

செக்ஸ், குழந்தை எதுவும் வேண்டாம் - தென்கொரியாவில் மாறும் நிலைமை

படம்
தென்கொரியாவில் 4 பி என்ற அமைப்பு புதிதாக உருவாகியுள்ளது. பெண்களுக்கான உரிமை கோரல்களுக்காக என்று நினைப்பீர்கள். அதற்காகவெல்லாம் கிடையாது. காதல், கல்யாணம், குழந்தை, குடும்பம் இதெல்லாம் வேண்டாம் என பிரசாரம் செய்யும் அமைப்பு அது. தொழில்நுட்பம் அங்கு சிறப்பாக இருந்தாலும் கலாசார மதிப்பில் அவர்களும் இந்தியர்களைப் போலத்தான். குடும்பம், திருமணம், குழந்தைகளைப் பராமரிப்பது, மாமியார் - மாமனார் இத்தியாதி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்டுகளை மருமகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது தென் கொரியர்கள் அதிலும் பெண்கள் இத்தனை பொறுப்புகளை நாங்கள் ஏற்கணுமா என கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.  “திருமண மார்க்கெட்டில் பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. நன்றாக படித்த பெண்களுக்கு மைனஸ் மார்க்குகளை ஆண்கள் போடுகிறார்கள். அவர்களுக்கு தங்களையும், குழந்தைகளையும், அவர்களின் வயதான பெற்றோர்களையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால்தான் பெண்கள் தற்போது திருமணத்தை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் போனி லீ என்ற பெண்மணி. 4 பி எனும் இந்த இயக்கத்தை தற்போது 4 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர்

புகழ்பெறும் வெப்டூன்கள்!

படம்
வெப் டூன் டேட்டா! 2020 ஆம் ஆண்டு கொரியாவின் வெப்டூன் சந்தை மதமிப்பு 869 மில்லியன் டாலர்களாக உயரும். இது டிஜிஇகோ என்ற கம்பெனியின் கணிப்பு. தென் கொரியாவின் லைன் வெப்டூன் எனும் தளத்தில் பார்வையிடும் ஆக்டிவ்வான பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 மில்லியன். மாதம்தோறும் இத்தளத்தை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15.5 பில்லியன். அமெரிக்காவில் வெளியாகும் லெஸின் காமிக்ஸில் வெப்டூன் ஒன்றின் விலை மதிப்பு .99 டாலர்கள். 2017 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு உயர்ந்த காமிக்ஸ் சந்தை மதிப்பு(லெஸின் காமிக்ஸ் வருமானம்) 10.5 பில்லியன் டாலர்கள். 2016-2018 ஆம் ஆண்டுவரை திருடுபோன வெப்டூன்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். வெப்டூனை வாசிப்பவர்களில் பெண்களின் பங்கு 50 சதவீதம். நன்றி: க்வார்ட்ஸ்.