இடுகைகள்

லட்சியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகத்தோடு இணைந்து மக்களோடு கூடி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்!

படம்
  மூன்று வகையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகள் உள்ளன.  சிறந்த வாழ்கை இதில் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சி இருக்கும். குறிப்பிட்ட திட்டமிட்ட போக்கில் வாழ்க்கை செல்லும்.  அர்த்தமுள்ள வாழ்க்கை  உங்களின் வாழ்க்கை, வளர்ச்சியை விட சேவைகளை செய்வதே முக்கியமானதாக இருக்கும்.  மகிழ்ச்சியான வாழ்க்கை  சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து அதன் வழியாக மகிழ்ச்சியை அடைவது... இதில் முதல் இரண்டு விஷயங்கள் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் சமூக உறவுகளை உருவாக்கிக்கொள்வது முக்கியம். இதில் ஒருவர் மகிழ்ச்சியை அதிகளவு பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்த அம்சம் இல்லாமலும் மகி்ழ்ச்சி சாத்தியம் இல்லை.  இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஒருவருக்கு ஏற்படும துயரமான மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் என்பவர், 'லேர்ன்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்' எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதில், மன அழுத்தம் மூலம் ஒருவருக்கு ஏறபடும் எதிர்மறை நிலைகளை அடையாளம் கண்டார்.  ஒருவரின் வாழ்வில் உள்ள பலத்தை அடையாளம் காண்பது முக்கியம். அதைவிட ப

பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்  வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன? வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான். ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன். லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?   ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம்,

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

விண்ணைத்தாண்டி சொந்த கிரகத்திற்கு பறக்க முயலும் பஸ் லைட் இயர்! - லைட்இயர் - டிஸ்னி பிக்ஸார்

படம்
  லைட் இயர் பிக்சார் -டிஸ்னி வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஒத்த கிரகம் ஒன்றுக்கு ஆராய்ச்சி செய்ய ஸ்பேஸ் ரேஞ்சர்கள் வருகிறார்கள். அப்படி வந்து ஆராய்ச்சி செய்யும்போது, அங்கு உயிருள்ள ஜந்துகளை பிடித்து உண்ணும் மர விழுதுகள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவற்றிடமிருந்து தப்பிக்கும்போது விண்கலம் பாறையில் மோத அங்குள்ள பீடபூமி அமைப்பு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் கோளுக்கு மீண்டு சென்றார்களா இல்லையா என்பதே கதை.  பஸ் லைட் இயர் (செல்லப்பெயர் பஸ்) என்பவர்தான் இதில் ஸ்பேஸ் ரேஞ்சர்களில் ஒருவர். இவருக்கு ஆணைகளை வழங்கும் கமாண்டர் பெண்மணி ஒருவர் உண்டு. அவர் பெயர் அலிஷா. பஸ் செய்யும் தவறு காரணமாகவே விண்கலம் பீடபூமி அமைப்பில் மாட்டிக்கொள்கிறது. கூடவே விண்கலத்திற்கு ஆற்றல் தரும் கிரிஸ்டலும் உடைந்துபோய் விடுகிறது. இந்த எரிபொருள் இருந்தால்தான் அவர்களின் சொந்த கிரகத்திற்கு செல்ல முடியும்.  இதை அதே கிரகம் ஒன்றிலிருந்து அகழ்ந்து எடுத்து சோதித்து பிறகுதான் பயன்படுத்த முடியும்.  தங்களது சொந்த கிரகத்திற்கு செல்வதே பஸ் காலகட்ட வீரர்களுக்கு லட்சியம்.  பஸ் இப்படி சோதனை செய்ய செய்ய அவரது

பசுமையான மரங்கள் நடப்படவேண்டும் என்பதே எனது லட்சியம்! - பீட்டர் ஜேம்ஸ்

படம்
  நேர்காணல் பீட்டர் ஜேம்ஸ் உதவி பேராசிரியர்,  சூழலியல், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சூழலியல் பற்றிய தங்களது ஆராய்ச்சியை விளக்க முடியுமா? இயற்கை சார்ந்த இடங்கள் எப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கின்றன, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். 1976ஆம் ஆண்டு தொடங்கி பல தனிப்பட்ட சூழலியலாளர்கள் செய்த ஆய்வுத்தகவல்களை இதற்காக ஆராய்ந்து வருகிறேன். மனிதர்களின் நோய், இறப்பு ஆகியவற்றையும் கவனித்து வருகிறோம்.  இயற்கைச் சூழல் மனிதர்களுக்கு என்ன பயன்களை தருகிறது? நாம் இன்று டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன்  ஆகியவற்றின் திரைகளைப் பார்க்க அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நமது கவனத்தை சிதறடிக்கிறது. இயற்கைச்சூழல், சீர்குலைந்த கவனத்தை சீராக்கி, திறன்களையும் மெருகேற்றுகிறது. பணியாற்றும் போது ஜன்னல் வழியாக தெரியும் இயற்கை காட்சிகள் ஒருவரின் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கிறது.   சூழல் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறீர்கள்? ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி சூழல் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். இதோடு கைகளில் அணியும் டிஜிட்டல் கருவிகள், டீப் லேர்னிங் அல்காரிதம், கூகுள் ஸ்ட்ரீட் விய

பத்து ஆண்டுகளில் நிறைவான கல்வி - இந்திய அரசின் திட்டம் வெல்லுமா?

படம்
இந்தியா, 2030 ஆம் ஆண்டில் நூறு சதவீத கல்வி என்ற லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது.  ஐ.நா சபை, மற்றும் யுனெஸ்கோ ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 6 - 17 வயதிலுள்ள மாணவர்களில் ஆறில் ஒருவர் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்  என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் தொடக்க கல்வியை நூறு சதவீதம் பேர் நிறைவு செய்திருப்பார்கள் என்றும், மேல்நிலைக்கல்வியை 84 சதவீதம் பேர் பெற்றிருப்பார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 2008 முதல் 2012 வரை இந்தியாவில் மாணவிகளின் சேர்க்கை அதிகமாகியுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் மேல்நிலைக்கல்வியில் இடைநிற்றல் அளவு 40 சதவீதமாக உள்ளது அபாயகரமானது. 2030 ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர்களும் , 30 சதவீத வயது வந்தோர்களும் கல்வி அறிவின்றி இருப்பார்கள். இந்தியாவில் கல்வி கற்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி கற்பதை கைவிட்டவர்களுக்கும் அதிக படிப்புகளைப் படிப்பவர்களுக்கும் உள்ள இடைவெளி வளர்ந்துகொண

லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?

படம்
www.pexels.com எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே... இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை. அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும். தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன். தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ? Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க. நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்