இடுகைகள்

குற்ற உணர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

படம்
             அண்டர் தி ஸ்கின் சீன தொடர் 24 எபிசோடுகள மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை. தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், க...

கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020

படம்
  டெல் மீ வாட் யூ சா கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிச்சிறுமி சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின் அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள்.   சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத   ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும் அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது. சூ அதிர்ச்சியடைந்து அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும் கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள். போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா...