இடுகைகள்

சாட்ஸி வெஸ்பெர்கர். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறப்பு பற்றி பேசலாம் வாங்க!

படம்
quartz டெத் கஃபே! கடந்த ஆண்டு 88 வயதான சாட்ஸி வெஸ்பெர்கர் தன் இறுதிச்சடங்கை தன் உறவினர்களுடன் தானே கொண்டாடினார். நியூயார்க்கின் ஆர்ட் ஆஃப் டையிங் இன்ஸ்டிடியூட்டில் இவர் பட்டதாரி. இறப்பு குறித்த தானட்டோலஜி படிப்பை கற்றார். ஆறுமாதப் படிப்பில் இடையே, முதல் மாதத்திலேயே  டெத் கஃபேவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். என்ன செய்வார்கள் இந்த டெத் கஃபேயில்? கேக்கை சாப்பிட்டபடியே டீ குடித்தபடி இறப்பை பற்றி பேசவேண்டும் அதுதான் கான்செஃப்ட். டெத் கஃபே இயக்கம், 2000 ஆம் ஆண்டு தொடங்கியது. ஸ்விஸ் சமூகவியலாளர் ஜோன் அண்டர்வுடின், அமைதியிலிருந்து இறப்பை மீட்டெடுக்க வேண்டும் என்று  கூறினார். டெத் கஃபே செயல்பாடுகளை வரைமுறைப்படுத்தியவர் இவர்தான். இன்று டெத் கஃபேக்கள் 65 நாடுகளில் செயல்பட்டுவருகின்றன. உலகம் முழுக்க செயல்படும் டெத் கஃபேக்களின் மொத்த எண்ணிக்கை 8,059. ஃபேஸ்புக்கில் 52 ஆயிரம் பேர்களுக்கு மேல் டெத் கஃபே பக்கத்தை பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள 60 சதவீத மார்ச்சுவரி பள்ளி மாணவர்களில் பெண்களே அதிகம். உலக மக்கள் தொகையில் 3% பேர் வயது 60 மற்றும் அதற்கும் அதிக