இடுகைகள்

ரத்த சாட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

படம்
    அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 காட்டேரி இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.   எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி   கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார். காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். உனக்கென்ன தண்டனை கி

குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட பெண்மணி, கண்களை மட்டும் வெட்டியெடுத்த ஆசிரியர்!

படம்
  அசுரகுலம் 3 ரத்த சாட்சி 1.0 மின்னும் கண்கள். தொண்ணூறுகளில் அமெரிக்காவில் குற்றச்சம்பவம் நடைபெற்றது. விலைமாதுக்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஆனால் அவர்களின் கண்கள் மட்டும் அறுவை சிகிச்சை மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட்டது போல இருந்தது. ஆனால் யார் இதை செய்தது என காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒருவரின் கொலை முயற்சியில் தப்பித்த பெண் ஒருவர் காவல்துறையினர் உதவியை நாடினார். அந்த நபர் பற்றி விசாரித்தபோது அவர் பெயர் சார்லஸ் ஆல்பிரைட் என்று தெரிய வந்தது. இவர், பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக  வேலை செய்துகொண்டிருந்தார். மேலும் பேஸ்பால் விளையாட்டுக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். இவர்தான் பெண்களைக் கொன்று கண்களை மட்டும் வெட்டி எடுத்தவர் என காவல்துறையினர், அவரது அறையை சோதித்து முடிவு செய்தனர். சார்லஸிற்கு பெண்களின் உடல் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது. அவருக்கு பிடித்தது கண்கள்தான். அதுதான் அவரை கொலை செய்வதற்கான ஈர்ப்பை உருவாக்கியது. பின்னாளில் சிறையில் இருந்தபோது கூட சுவற்றில் கண்களை வரைந்து வைத்துக்கொண்டே இருந்தார். ஃபெட்டிஷ் என முன்னர் சொன்னது போல குறிப்பிட்