இடுகைகள்

பிண சாம்பல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

படம்
  ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து! கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்.  250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.    கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்ள கான்க்ரீட் கலவையில், இறந்துபோனவரின் ச