இடுகைகள்

டிஜ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை பாதுகாக்க களத்தில் இறங்கும் கூகுள்!

படம்
  இன்று பெருந்தொற்று காலத்தில் வாழ்கிறோம். சமூக வலைத்தளங்கள் வந்தபோதே நம்முடைய வாழ்க்கை பெரும்பாலும் இணையத்தோடு இணைந்துவிட்டது. ஒருவரைப் பற்றி தேட வேண்டுமென்றால் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மேலும் சர்ச் எஞ்சின்களில் தேடினால் ஒருவரின் புகைப்படம், குறைந்தபட்சம் அவரின் வேறு தகவல்களையும் கூட பெறலாம். ஒருவகையில் இது சிறப்பானது என நிறுவனங்கள் கூறினாலும், தகவல்களை பிறர் தவறாக எடுத்து பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே கூகுள் பதினெட்டு வயதிற்கு கீழுள்ளவர்களை பாதுகாக்க தனது நிறுவன விதிகளை மாற்றியுள்ளது.  குழந்தைகள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் என அனைவருமே, பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதால், விதிகள் மாற்ற்றப்பட்டுள்ளன. இதன்படி மைனர்கள் அனைவருமே தங்கள் புகைப்படங்களை இணையதளங்களிலிருந்து நீக்கிக்கொள்ள கூகுள் கோரியுள்ளது.  யூட்யூபில் மைனர்கள் பதிவேற்றும் வீடியோக்கள் அவர்களை பாதுகாக்கும் மோடில்தான் இயங்கும். இதில் உள்ள சேஃப் சர்ச் என்ற வசதி முதலில் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கானது. இப்போது பதிமூன்று வயதுக்குட்பட்டோருக்காக மாற்றப்பட்டுள

திருடப்படும் பைக்குகள் எங்கு செல்கின்றன? - அலசல் ரிப்போர்ட்

படம்
  சென்னை பெருநகரில் மாதம்தோறும் அறுபது பைக்குகள் திருடப்படுகின்றன. இதனை பதிவு செய்வதில் காவல்துறை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படி திருடப்படும் பைக்குள் என்னாவாகின்றன என்று அந்த உலகைப் பார்க்க உள்ளே நுழைந்தால் பொல்லாதவன் பட அனுபவம் இன்னும் பெரிய கான்வாஸில் கிடைக்கிறது.  குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் பைக்குளை திருடர்கள் நோட்டமிட்டு பார்த்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அதன் லாக்கை லாவகமாக உடைத்து திறந்து விடுகின்றனர். இதற்கு மாஸ்டர் கீ உதவுகிறது. இந்த நேரத்தில் காவல்துறை ரோந்து வருமே, அதற்கு சமாளிக்க அருகிலுள்ள தியேட்டரில் சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பிரச்னையாக இருக்கும் கேமராக்களிடமிருந்தும் தப்பித்தான் பைக்கை திருடி கொண்டு செல்கிறார்கள்.  இந்த வியாபாரம் இரண்டு வகையில் நடைபெறுகிறது. ஒன்று, பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். எனக்கு பைக் வேண்டும் என்று சொல்லும் கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு முக்கியமான ஆட்கள்.  இந்த பிராண்ட் பைக் வேண்டும் என ஏஜெண்டுகளிடம் சொல்லி சிலர் வாங்குகிறார்கள். இந்த வியாபாரம் நம்பகமானது. இ