இடுகைகள்

தனிமைப்படுத்துதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டிலேயே தனியறையில் இருப்பது சரியா?

படம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் பலரும் பரிந்துரைப்பது வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றுதான். வீட்டிலேயே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. காரணம், அதற்கான அடிப்படை வசதிகளை பலரும் உருவாக்கி வைத்திருக்க மாட்டார்கள். மேலும், வேலை செய்வதற்கான மனநிலையை வீட்டில் உருவாக்கிக்கொள்வது கடினம்,. வீட்டில் இருக்கும்போது, மனைவி பேசுவதைக் கேட்கவேண்டியிருக்கும். குழந்தைகளோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும். இதற்கிடையில் கவனமான ஆபீஸ் வேலையையும் பார்க்கவேண்டும் என்பது பெரும் சுமையாகவே இருக்கும். கணியம் சீனிவாசன் எழுதியுள்ளது போலவே, நேர மேலாண்மை இதில் முக்கியமானது. அதை கடைப்பிடித்து வேலை செய்வது உடனே அனைவருக்கும் சாத்தியமாகாது. மேற்கு நாடுகளில் குழந்தைகளுக்கு தனி அறை உண்டு. அவர்களுடைய பணியை அங்கு வைத்து செய்வார்கள். சாப்பிட, பேச என ஹாலுக்கு வருவார்கள். இந்திய வீடுகளில் இப்படி தனி அறைகளை எதிர்பார்க்க முடியாது. நேரடியாக சொன்னால் இங்கு அந்தரங்கம் என்பதே பொதுவாகத்தான் இருக்கும். வீடு என்பது குறைந்தபட்சம் ஹால், ஒரு அறை, சமையலைறை, கழிவறையோடு இணைக்கப்பட்ட குளியலறை என்றே பொதுவாக இ