இடுகைகள்

அதிவேக விலங்குகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிவேக விலங்குகள் எவை தெரியுமா?

படம்
அதிவேக விலங்குகள்! PEREGRINE FALCON ஆர்க்டிக் பகுதி தவிர அனைத்து இடங்களிலும் காணப்படும் பால்கன் பறவை சாதாரணமாக மணிக்கு 96 கி.மீ வேகத்தில் பறக்கும். ஸ்டூப் டைவ் அடித்து வேட்டையாடும்போது 320 கி.மீ வேகம் காட்டும். நீளம் 34-58 செ.மீ. எடை 1-1.5 கி.கி   BRAZILIAN FREE-TAILED BATS மொலாசிடே குடும்பத்தைச் சேர்ந்த எலிவால் கொண்ட வௌவாலின் உடல் நீளம் 95 மி.மீ எடை 14 கி. நீளமான சிறகு, குறுகிய கால்கள் என அமைந்திருந்தாலும் 160 கி.மீ வேகத்தில் மைலேஜ் காட்டுகிறது. HYBOMITRA HINEI WRIGHTI   டபானைடே குடும்பத்தைச் சேர்ந்த ஈ வகை உறுப்பினர். இதில் 240 வகை ஈக்கள் உண்டு. காதல் செய்யும்போது பெண் இணையை தேடிப்பிடித்த வேகம் 144 கி.மீ என கணக்கிட்டு புளோரிடா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். GRAY-HEADED ALBATROSS 129 கி.மீ வேகத்தில் பறந்து கின்னஸ் சாதனை செய்த அல்பட்ராஸ் பறவை டையோமெடிடே குடும்பத்தைச் சேர்ந்தது. உலக இயற்கை பாதுகாப்பகம்(IUCN) மூலம் 22 அல்பட்ராஸ் பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிறகு நீளம் 11 அடி, எடை 10 கி.கி அதிகம்.