இடுகைகள்

கலவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் இதுதாங்க வித்தியாசம்!

படம்
மிஸ்டர் ரோனி சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் என்ன வேறுபாடு? கட்டிடத்தில் பயன்படும் கலவையை நாம் கான்க்ரீட் என்றும் வீடு கட்ட கலப்பதை சிமெண்ட் என பாதிப்பேர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. கான்க்ரீட்டில் பகுதிப்பொருளாக கலக்கப்படுவதுதான் சிமெண்ட். சிமெண்ட் என்பது தனி. அதில் தேவைக்கேற்ப லைம்ஸ்டோன், களிமண், கிளிஞ்சல்கள் ஆகியவற்றை கலந்து தயாரிப்பதுதான் கான்க்ரீட். கலக்கப்பட்ட பொருட்களை 2642 டிகிரி வெப்பத்திற்கு சூடு செய்து அதனை குளிர்வித்து பாக்கெட்டுகளில் நிரப்பினால், கான்க்ரீட் ரெடி. உடனே இதனை எடுத்து கட்டிடங்களில் பூசி காய்ந்தால் உடனே குடி போய்விடலாமா என்று கேட்காதீர்கள். இதில் சிமெண்ட், மணல் கலவையை சரியாக கலக்கினால்தான் ரெடி டூ பேஸ்ட் பத த்திற்கு வந்து சேரும். வெறும் சிமெண்டை பூசினால் கட்டிடம் நிற்காது. அதற்கு சரிநிகராக அதில் மணல் இருப்பது அவசியம். நன்றி- மென்டல் ஃபிளாஸ்