பார்ச்சூன் ஆசியா 2024 - சாதனை படைத்த பெண் தொழிலதிபர்கள்
சக்திவாய்ந்த பெண்கள் - தொழிலதிபர்கள், அதிகாரிகள் 2024 ஐரின் லீ தலைவர், ஹைசன் டெவலப்மென்ட் ஹாங்காங் irene lee hysan development ஹைசன் நிறுவனம், ஹாங்காங் நாட்டில் இயங்கும் நூற்றாண்டைக் கடந்த கட்டுமான நிறுவனம். ஐரின் லீ, ஹைசனுக்கு வருவதற்கு முன்னர், 91 ஆண்டுகளைக் கடந்த ஹாங்செங் வங்கியின் போர்டில் தலைவராக இருந்தார். அதன் வரலாற்றில் முதல் பெண் தலைவர ஐரின் லீதான். இது அந்த சமூகத்தில் நிலவும் ஆண் மேலாதிக்க தன்மையை வெளிக்காட்டுகிறது. ஹைசன் சந்தையில் லாபத்தின் திசையில் பயணிக்கவில்லை. நஷ்டமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 111 மில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. அந்த இழப்பை ஐரின் லீ தனது திறமையால் ஈடுகட்டக்கூடும். மிச்செல் சியோ ஹியூநிங் துணைத்தலைவர், இயக்குநர், மேவா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் michelle cheo huining mewah international நிறுவனத்தை உருவாக்கிய சியோபெங் ஹாங்கின் பேத்தி, மிச்செல். இவர், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடவைத்து முதலீடுகளை திரட்டுவதோடு, இந்தோனேஷியாவில் காலூன்றவும் திட்டங்களை தீட்டி வருகிறார். நூறு நாடுகளுக்கு சமையல் எண்ணெய், ச...