தொழில்துறையில் சாதனை செய்யும் பெண் தொழிலதிபர்கள், அதிகாரிகள் - பார்ச்சூன் 2024
ஆற்றல் வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் - பார்ச்சூன் 2024
கிரேஸ் சுவா
இயக்குநர், ஃபேர்பிரைஸ் குழுமம்
சிங்கப்பூர்
grace chua
fairprice group
சுவா, குழுமத்தின் ஓன் பிராண்ட்ஸ் பிரிவின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம், சிங்கப்பூரின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் அமைப்பைக் கொண்டுள்ளது. ஓன் பிராண்ட்ஸ் என்பது, குறைந்த விலையிலான பொருட்களை விற்று வருகிறது. சுவா, குழுமத்தில் 2017ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்பிலும் வேலை செய்திருக்கிறார். ஃபேர்பிரைஸ் குழுமம் தனது பொருட்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்க திட்டமிட்டு வருகிறது.
ஜெனிபர் வாங் சுயி ஃபென்
நிதி தலைவர், மேக்சிஸ்
மலேசியா
jenifer wong chui fen
maxix
மலேசியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதில் வணிக திட்டமிடல், நிதி மேலாண்மை ஆகிய பொறுப்புகளை வகிக்கிறார். தொலைத்தொடர்புத் துறையில் பதினேழு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நிதி நிர்வாகத்தில் இருபத்தெட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஜெனிபரின் வழிகாட்டுதலில் நிறுவனம் முந்தைய ஆண்டை விட அதிகமாக நான்கு சதவீத வருமானத்தைப் பெற்றுள்ளது.
சந்தியா தேவநாதன்
துணைத்தலைவர், மெட்டா இந்தியா
மெட்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 2016ஆம் ஆண்டு மெட்டாவில் இணைவறகு முன்னர் வங்கித்துறையில் பணிபுரிந்தார். 2023ஆம் ஆண்டு மெட்டாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு பொறுப்பாக மாறினார். இந்து பேரினவாத கட்சிக்கு ஆதரவாக உள்ள நிறுவனம் என்பதால், லாபத்தில் கொழிக்கிறது.
ஃபியோன் ஆங்க்
நிர்வாகத் தலைவர், லிங்க்டு இன் ஆசியா பசிபிக், சிங்கப்பூர்
feon ang
linkedin
உங்களது புரொபைலை சிலர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் யாரென தெரியவேண்டுமா, காசு கொடு என மிரட்டும் லிங்க்டு இன் நிறுவனத்தின் நிர்வாகி. இப்போது ஆசியா பசிபிக்கில் 310 மில்லியன் பயனர்கள் உள்ளனர். பத்தாண்டுகளாக வேலை செய்து வியர்வை சிந்தி பதவி உயர்வைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கார்ட்னர் என்ற நிறுவனத்தில் பதிமூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அரிசாரா சாகுல்காராவெக்
நிதித்துறை தலைவர், பான்பு
தாய்லாந்து
arisara sakulkarawek
banpu
பான்பு, தெற்காசியாவின் ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. சீனா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஆற்றல் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை கட்டி வருகிறது. பான்புவில் 2011ஆம் ஆண்டு நிதித்துறையில் இணைந்தார். பிறகு, குழுமத்திற்கான நிதித்தலைவராக உருவானது, 2019ஆம் ஆண்டில். பான்புவின் பல்வேறு சகோதர நிறுவனங்களின் தலைவராக உள்ளார். 2014ஆம் ஆண்டு தொடங்கி தூய ஆற்றல் சார்ந்த திட்டங்களில் ஈடுபட்டு வருகிற நிறுவனம் இது.
பியர்லைன் பாவு
குழும இயக்குநர், சிங்லைப்
சிங்கப்பூர்
pearlyn phau
singlife
பாவு, சிங்லைபில் இணைவதற்கு முன்னர் டிபிஎஸ் என்ற வங்கியில் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டவர். 2021ஆம் ஆண்டு, சிங்லைபில் இணைந்தார். சிங்லைப், சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம். 2022இல் இதன் சொத்து மதிப்பு 10.7 பில்லியன் டாலர்கள். 1970ஆம் ஆண்டு தொடங்கி உரிமம் பெற்று காப்பீட்டு சேவைகளை வழங்கிவருகிறது. 2018ஆம் ஆண்டில், ஜூரிச் லைப் என்ற காப்பீட்டு நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2022ஆம் ஆண்டு, அவிவா சிங்கப்பூர் நிறுவனத்தோடு இணைந்தது. இப்போது சுமிடோமோ லைப் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது.
fortune asia
தீரன்
கருத்துகள்
கருத்துரையிடுக