பெங்களூருவில் பொதுமக்கள் கூடுவதற்கான இடங்கள் தேவை!

 

 


 



 

 

 

 

பொதுமக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் போராளி
வி ரவிச்சந்தர்

நமது சமூகம் தொடர்ச்சியாக பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டு நின்றுவிடாமல் அந்த நிலையை மாற்ற முயல்பவர்களில் குறிப்பிடத்தக்கவர், வி ரவிச்சந்தர். வயது 67 ஆகிறது. தொடர்ச்சியாக அரசின் நிர்வாக பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறார். கோரமங்கலா பகுதி குப்பைகளை கிராமங்களுக்கு கொண்டு சென்று கொட்ட்க்கூடாது. அப்படி கொட்டினால் கிராமம் பாதிக்கப்படும் என வெளிப்படையாக எதிர்க்கும் மக்களுக்கான குரல் அவருடையது.

நிதியுதவி குறைவாக கொண்டிருக்கும் திட்டம் என்றாலும் அதில் பாதிப்பு என்றால் வெளிப்படையாக மக்களிடம் பேசி ஆதரவு திரட்டி அதை மாற்ற முயல்பவர். வெறும் பேச்சு மட்டுமின்றி, செயல்படுவதற்கும் தயங்காதவராக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இருபத்து நான்கு ஆண்டுகளாக அரசின் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடி வருகிறார். அவரின் சாதனைகள் என்று பார்த்தால் குறிப்பிட்டு மூன்று விஷயங்களைக் கூறலாம். சொத்து வரி திட்டம், பாதசாரிகளுக்கான சாலை, லால்பாக் பூங்கா சூழல் திட்டம் ஆகியவற்றில் ரவிச்சந்தரின் பங்களிப்பு உள்ளது.

பெல்லாந்தூர் ஏரியில், நாம் அனைவரும் நீந்திக் குளிப்பதைக் கனவு கண்டிருக்கிறீர்களா? என்பவர், 1969ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ குவான் யூவின் மாசுபட்ட ஆறுகளை சுத்தம் செய்யும் திட்டங்களால் ஊக்கம் பெற்றவர். ரவிச்சந்தர், அரசின் பல்வேறு செல்வாக்கு மிக்க கமிட்டிகளில் பங்கெடுத்து இயங்கியுள்ளார். குறிப்பாக பெங்களூரு அஜெண்டா டாஸ்க் போர்சில் பங்காற்றியுள்ளார். இலக்கிய திருவிழாவிற்கென பனிரெண்டு ஆண்டுகள் திரள் நிதி திரட்டியுள்ளார்.

மாநிலத்தில் மக்கள் ஒன்று கூடுவதற்கான பொது இடங்கள் குறைந்து வருவதை அறிந்து, அதை அதிகரிக்க பிரசாரம் செய்ய முயன்று வருகிறார். அண்மையில் ஸ்காட்லாந்து சென்று வந்தவர், அங்கு கலாசாரம் தொடர்பாக ஆண்டுக்கு 25 நாட்களில் அறுநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் 2,200 நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கண்டிருக்கிறார். இதில் பெருநிறுவனங்களின் விளம்பரம் ஏதுமில்லை என்பது அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடி கலைகளைப் பற்றி பேசி, அதை நடத்தக்கூடிய இடங்களை உருவாக்கவேண்டுமென்பது ரவியின் லட்சியக்கனவு. பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக நின்றால்தான் பொது இடங்கள் அழிந்து வருவதை தடுக்க முடியும் என யோசித்து வருகிறார். இதற்கென பிஎல்ஆர் ஹப்பா திருவிழா, சபா என பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

ஒருநாள் மக்கள் நகரின் போக்குவரத்து நெரிசல், குப்பை ஆகியவற்றைப் பற்றி பேசாமல் வேறு விஷயங்களைப் பேசவேண்டும் என வி ரவிச்சந்தர் நினைக்கிறார். அப்படியே நடக்கவேண்டுமென நாமும் நம்பிக்கையைப் பேணுவோம்.

தி இந்து - பிரியா ரமணி
தமிழாக்கம்
விபுத்தன் 

https://www.thehindu.com/opinion/columns/v-ravichandar-civic-evangelist-bengaluru-public-eye/article68704727.ece

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்