பிளாக் மித் - வுகோங் உலகை கலக்கும் சீன வீடியோகேம்

 

 

 







உலகை கலக்கும் சீன வீடியோ கேம் - பிளாக் மித் வுகோங்

சீனாவில் இருந்து வெளிவரும் அனைத்தையும் உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியான சீனா, மாபெரும் வளர்ச்சியையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிளாக் மித் என்ற வீடியோ கேம் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியிட்ட மூன்று நாட்களில் பத்து மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் 854 மில்லியனாக உயரும் என வணிக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை இது வெறும் வீடியோகேம் மட்டுமல்ல. அவர்களின் கலாசாரமும் இணைந்துள்ளது.

ஆப்ரோசெஞ்சு, பிளாக் மித் விளையாட்டை விளையாடி இரண்டு மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளார். ஏறத்தாழ அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். காத்திருப்பு வீண் போகவில்லை. விளையாட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கணினி விளையாட்டு சீன நாட்டுப்புறக்கதையான ஜர்னி டு வெஸ்ட் என்ற கதையை ஆதாரமாக கொண்டது. பல்வேறு நவீன மாற்றங்களுடன் கணினி விளையாட்டு பயனர்களின் கைகளுக்கு வந்துள்ளது. தொன்மை புனைவுகளோடு, நவீன கண்டுபிடிப்புகள் இணைந்துள்ளதாக வீடியோ கேமிற்கு விமர்சனங்கள் வந்துள்ளது. உலகளவில் சீன விளையாட்டுகளுக்கென சந்தை இருந்தாலும் பிளாக் மித் விளையாட்டு, துறைசார்ந்து முக்கியமான வெற்றி. இந்த வெற்றி அத்துறைக்கு இன்னும் பல்வேறு திறமையானவர்களை அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், மொபைல் கேம் பட்டியலில் முப்பத்து நான்கு சீன நிறுவனங்கள் புதிதாக உள்ளே நுழைந்துள்ளன. இவர்களின் வருமான சதவீதம் 37.3. 2.09 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றிருக்கிறார்கள்.
சீனாவில் தொடக்கத்தில் மேற்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தினாலும், தற்போது செயற்கை நுண்ணறிவு, இ வணிக நிறுவனங்களின் எழுச்சி, எலக்ட்ரானிக் முறையில் கட்டணங்களை செலுத்துவது என பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களில் சீனா முன்னேறி வருகிறது. பிற நாடுகளுக்கும் வழிகாட்டும் விதமாக மாறி வருகிறது. வியட்நாம், இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் சீனாவின் தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு உள்ளது.

பிற நாடுகளை விட சீனா உருவாக்கும் ஆப்கள் உலகளவில் கவர்ச்சிதன்மை கொண்டவையாக மக்களை ஈர்ப்பவையாக மாறிவருகின்றன. போட்டியை எதிர்கொள்ள முடியாத முதலாளித்துவ நாடுகள் பாகுபாட்டுடன் பொருளாதார தடைகளை உருவாக்கி வருகிறார்கள். இதெல்லாம் தாண்டித்தான் சீனாவின் டெக் நிறுவனங்கள் சாதித்து வருகின்றன. கணினி விளையாட்டுத்துறையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக முக்கியமான சந்தையாக சீனா வளர்ந்து வருகிறது. விளையாட்டுகளை உருவாக்குவதிலும் சீனர்கள் சோடை போகவில்லை. அதிலும் சாதனைகளை செய்து வருகிறார்கள். அதற்கு பிளாக் மித் என்பது சான்று. உண்மையாக சொன்னால் இது சாதனையும் கூடத்தான்.

சீனா டெய்லி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்