அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை


















இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது.




இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.




நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவேண்டும். எதிர்காலத்தை யோசிக்கவிடாமல் செய்வது நமது மனதிலுள்ள வினோதமான பயமே. எதிர்காலத்தில் ஏதோவென்று தவறாக நடந்துவிட வாய்ப்புள்ளதே என மனம் திகைத்து பயப்படுகிறது. கவலைகள் வருத்தினாலும் வரும் ஆபத்தை எதிர்கொள்ள உடல், மன ஆற்றலை சேமித்து வைத்துக் கொள்கிறோம். எதிர்கால மேம்பட்ட உலகை அமைதியான முறையில் உருவாக்கவும், மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் ஒத்துழைப்போடு ஆக்கப்பூர்வ வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும்.




இதுபோன்ற அறிவியல் மாநாடுகளில் நட்புணர்வு கொண்ட அணுகுமுறை உள்ளது. அரசியலோடு தொடர்பற்ற முறையில் மாநாட்டு நிகழ்வுகள் அமைந்துள்ளதாக கருதுகிறேன். பிற நாடுகளின் ஒத்துழைப்போடு அறிவியல் துறையில் நிறைய மேம்பாடுகளை உருவாக்க முடியும். இதற்கு பரஸ்பரம் நட்புணர்வு கொண்ட மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அறிவியல் துறைகளின் சிறப்பாக பணி, அரசியல் போன்ற களங்களில் கூட நல்ல பயன்களை உருவாக்கித் தரும். அரசியல்வாதிகளின் பிரச்னைகளில் அறிவியலாளர்கள் பங்கு பெறுவது, பிரச்னைகளில் புதிய கோணத்தை அணுகிப் பார்க்க உதவும். அவர்கள் மூலமே உலகம் அமைதியை நோக்கி நகர முடியும். அவர்களது வாழ்க்கை அமைதியாக இருப்பதன் மூலமே, உலக அமைதியும் சாத்தியமாகும்.




அறிவியல் மாநாடுகள், பரஸ்பர உறவுகள் சீராக உள்ள நாடுகளைக் கூட ஒத்துழைப்பு கொண்டதாக மாற்றக்கூடியவை. மேம்பாட்டை அடிப்படையாக கொண்ட பத்தாண்டுகளில், ஒத்துழைப்பு வளரவேண்டும் என விரும்புகிறேன். அறிவியல் செயல்பாட்டில் நல்ல நோக்கம் இருந்தால், அதுவே உலகை நல்ல இடத்தை நோக்கி கூட்டிச்செல்லும். ஊடகங்கள், நாடுகளுக்கு இடையிலுள்ள ஒற்றுமையை விட முரண்பாடுகளை அதிகளவு பேசிவருகின்றன. ஐ.நா சபை செய்யும் ஒத்துழைப்பு முயற்சிகளை ஏற்று நம் மனதில் அச்சுறுத்தி வரும் பயத்தை நீக்கிக்கொள்வது நல்லது.




நான் ஜெய்ப்பூரில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியா பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற நிலையில், ஜெய்ப்பூரை உருவாக்கிய மனிதரை நினைவுகூர்வோம். அவர், தனது திறமையை வெளிப்படையாக உலகிற்கு வெளிக்காட்டிய மனிதர். வானியலாளரான அவர், ஐரோப்பாவிற்கு ஒரு ஆராய்ச்சிக் குழுவினரை அனுப்பி வைத்து வானியல் பற்றிய முழுமையான ஆராய்ச்சித் தகவல்களை சேகரித்தார். இன்று நாம் பார்க்கும் பல்வேறு வானியல் கண்காணிப்பு மையங்களை அவரே உருவாக்கினார். ஜெய்ப்பூர் நகரை இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரே திட்டமிட்டு வடிவமைத்தார். அவரது பெயர், ஜெய்சிங். அவரது பெயரில்தான் நகருக்கு ஜெய்ப்பூர் என்ற பெயர் சூட்டப்பட்டு, மக்களால் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.




இங்கு வருகை தந்துள்ளவர்கள், ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்ததும் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிடுவார்கள். பணிசெய்யும்போது, இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் , நாட்டைப் பற்றிய மகிழ்ச்சியான சம்பவங்களும் நினைவுகளும் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அதேசமயம், நாட்டைப் பற்றிய பிரச்னைகள், விவாதங்கள், சர்ச்சைகளும் உங்களது காதுகளை எட்டியிருக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் எங்களது செயல்பாடுகள் பற்றி நல்லவிதமாக அறிக்கை வெளியிடப்படவில்லை. திட்டங்களில் உள்ள தோல்விகளை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியாகி இருக்கிறது. அதிலுள்ள தவறுகளை நாமாக புரிந்துகொண்டு சீர்திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. அதேசமயம், நமது தவறுகளை நாமாக ஒப்பு்க்கொண்டு கூறினோம் என்று சிலர் தவறாக அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், சுயநலமாக பயன்பெறவும் வாய்ப்புள்ளது.




நாம் சில இலக்குகளை திட்டமிட்டபடி அடையவில்லை என்பது உண்மை. அதேசமயம் வேறு சில இலக்குகளை அடைந்து சாதித்திருக்கிறோம். நம்மைப் பற்றி வேறு வகையில் புகார்களைக் கூற பிறருக்கு வாய்ப்புகள் இல்லை. இந்திய நாடாளுமன்றம் இங்கே இப்படித்தான் செயல்பட்டு வருகிறது. அறிவியல் வழியில் உண்மையைத் தேடி பயணித்து வருகிறோம். நடைமுறையாக அறிவியலை சிறப்புற பயன்படுத்தி, மக்களுக்கு உதவும்படி செய்யவேண்டும். சுதந்திரமாகவும் அழுத்தமின்றியும் செயல்பட்டால் எதிர்பார்த்த பயன்களைப் பெறலாம். இங்கு வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்கள் மீது எனக்கு நல்லெண்ணமும் மதிப்பும் உள்ளது. பல்வேறு நாடுகள், பல்வேறு துறைசார்ந்த அறிவியலாளர்கள் வழியாக வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.




டாக்டர் பாபா, என்னுடைய செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். என்னளவில் செயல்பாடுகளை விரிவாக்கிக் கொள்ள முயன்று வருகிறேன். இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் கூட பொருளாதாரம் உள்ளிட்ட துறையில் தடையை, தேக்கத்தை சந்தித்து வருகிறது. தடையை உடைத்து தேக்கத்திலிருந்து வெளியே வர நமது நாட்டு மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தேக்கநிலையிலுள்ள காலகட்டத்தை நாம் கடந்தாலே, அது மிகப்பெரிய சாதனையாக மாறும். நாம் செய்த தவறுகள், வீழ்ச்சிகளைக் கடந்து உழைப்பதே நம்மை முன்னேற்றும். மென்மேலும் முன்னேற்றத்தை பெறும் வகையில் உழைப்பை அப்படியே தொடர்வது அவசியம்.




இந்தியாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமை, மகிழ்ச்சியின்மையை நீக்குவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. கடந்தகால வரலாறுப்படி, ஒரு நாடு அமைதியை நிலை நிறுத்தினால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம். இதை உணர்ந்துகொண்ட நாடுகள், அமைதிப் பணியை ஈடுபாட்டுடன் செய்துவருகின்றன. இப்பணியை செய்யும் தன்னார்வலர்களான மனிதர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அறிவியலாளர்களும் அமைதிக்கான பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்று உழைக்கும்போது அமைதிப்பணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. அமைதியை பிரசாரம் செய்து உழைக்கும்போது, பாதையில் வரும் தடைகளை எளிதாக நீக்கிவிட முடியும்.




இந்தியாவிலிருந்து கிளம்பிச் செல்லும்போது , எங்கள் நாடு பற்றிய மகிழ்ச்சியான நினைவுகள் உங்கள் மனதிலிருக்கும் என நம்புகிறேன். உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையவும், திரும்பவும் எங்கள் நாட்டிற்கு வரவும் வாழ்த்துகிறேன். 


https://in.pinterest.com/pin/851743348290985312/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்