துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!
துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!
டெட் டாக்ஸ் உரைகளை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள். அதில் துறை சார்ந்த பிரபலம் ஒருவர், மேடைக்கு வந்து தன்னுடைய அனுபவங்களை அங்கு கூடியுள்ள மக்களிடம் பகிர்ந்துகொள்வார். அவர் தொழிலதிபராக, திரைப்பட இயக்குநராக, பாடகராக, விளையாட்டு வீரராக இருக்கலாம். தனது அனுபவங்களை கூடியுள்ள மக்களுக்கு கடத்துகிறார். இந்த பேச்சு நீண்டதாக இருக்கலாம். அல்லது சிறியதாக இருக்கலாம். ஆனால், ஒருவர் தன்னுடைய கதையை பிறருக்கு கூறுகிறார். கதை சொல்லும், அதை கேட்கும் ஆர்வம் உடையவர்கள்தான் நாம். எனவே டெட் டாக்ஸ் மகத்தான வெற்றி பெற்று உள்ளது.
இதை நகல் செய்து டென்சென்ட் நியூஸ் நிறுவனம் சீனாவில் 2016ஆம் ஆண்டு ஸ்டார் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதில், நூறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பேசுவார்கள். மக்கள் அவர்களின் அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இது மக்களில் பலருக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பிரபலங்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைக் கடந்து, வேறு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் கூறுகிறார்கள். இதன் வழியாக உரையைக் கேட்கும் மக்கள் நுட்பமான தொடர்பை அனுபவத்தை பெறுகிறார்கள்.
பேசும் பிரபலங்களில் சிலர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கதை வழியாக அந்த தொண்டு நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கும் டென்சன்ட் நிறுவனம், தனியாக நிகழ்ச்சி ஒன்றை 2015 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறது.
பேஸ்கட்பால் வீரர் யாவோ தொடங்கி நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அத்துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஸ்டார் டாக்ஸ் நிகழ்ச்சியில், யாவோ சிச்சுவான் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றச் சென்று அங்குள்ள மாணவனிடம் நட்புகொண்டதை நினைவுகூர்ந்தார்.
ஸ்டார் டாக்ஸ் நிகழ்ச்சியில், பிரபலங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பிரபலங்களே அப்படியே மடை திறந்தது போல பேசவேண்டியதுதான். புதிய விஷயங்களை ஆராய்ந்து பேசினால்தான், பேச்சுநடையில் தடை ஏற்படும். பேசுவது அவர்களது சொந்தவாழ்க்கை, கடந்து வந்த பயணம் என்பதால் பெரிய சிக்கல் ஏதும் ஏற்படுவதில்லை.
சீனாவின் புகழ்பெற்ற பாடகர் ஹூவாங் வனவிலங்கு கண்காட்சியகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்த அனுபவத்தைக் கூறி விலங்குகளை நாம் துன்புறுத்தாமல் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அவர் கிளியின் கூண்டை சுத்தம் செய்தபோது, அக்கிளியை வளர்த்தவர் அதைக் கைவிட்டு சென்றதை அறிந்துகொண்டார். அக்கிளி, மனிதர்களின் பேச்சை பேசிப்பழகியதால் அதை மிமிக்ரி செய்துகொண்டே இருந்திருக்கிறது. விலங்குகளை மனிதர்கள் வளர்த்தி, பிறகு அதை திடீரென கைவிடும்போது அவற்றுக்கு ஏற்படும் தனிமை, கையறு நிலையைப் பற்றி யோசிப்பதில்லை. ஹூவாங்கின் பேச்சு விலங்குகளை வளர்ப்பதில், பாதுகாப்பதில் அக்கறையைக் காட்டவேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டிருந்தது. டிவி, திரைப்பட நடிகைகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், சுயாதீன இசைக்கலைஞர்கள் என பலரும் மக்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.
china daily- xufan
#star power #charity #tencent news #star talks #yao #public talks #99 giving day #speech #society #china #star #china daily #philanthrophy
கருத்துகள்
கருத்துரையிடுக