பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது!

 

 



 
பெரியார் ஆயிரம்

தர்மம் என்று இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் அதற்கு முன் பழக்கத்திலிருந்த வேதங்களிலும் கூறப்பட்டது வர்ண தர்மத்தையே ஆகும்

மனிதர்களை பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம்.

எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கு இருக்கவேண்டிய குணங்கள்- அவர்கள் செய்யும் பொதுநலப் பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது. செய்யும் பொதுப்பணியில் பதவி பெருமை, இலாகா, தனி அந்தஸ்து போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது.

ஒரு பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது.

எந்த காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு.

நீதி கெட்டது யாரால் என்ற நூலில் பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்கிறார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்