பார்ச்சூன் ஆசியா 2024 - சாதனை படைத்த பெண் தொழிலதிபர்கள்
சக்திவாய்ந்த பெண்கள் - தொழிலதிபர்கள், அதிகாரிகள் 2024
ஐரின் லீ
தலைவர், ஹைசன் டெவலப்மென்ட்
ஹாங்காங்
irene lee
hysan development
ஹைசன் நிறுவனம், ஹாங்காங் நாட்டில் இயங்கும் நூற்றாண்டைக் கடந்த கட்டுமான நிறுவனம். ஐரின் லீ, ஹைசனுக்கு வருவதற்கு முன்னர், 91 ஆண்டுகளைக் கடந்த ஹாங்செங் வங்கியின் போர்டில் தலைவராக இருந்தார். அதன் வரலாற்றில் முதல் பெண் தலைவர ஐரின் லீதான். இது அந்த சமூகத்தில் நிலவும் ஆண் மேலாதிக்க தன்மையை வெளிக்காட்டுகிறது. ஹைசன் சந்தையில் லாபத்தின் திசையில் பயணிக்கவில்லை. நஷ்டமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 111 மில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. அந்த இழப்பை ஐரின் லீ தனது திறமையால் ஈடுகட்டக்கூடும்.
மிச்செல் சியோ ஹியூநிங்
துணைத்தலைவர், இயக்குநர், மேவா இன்டர்நேஷனல்
சிங்கப்பூர்
michelle cheo huining
mewah international
நிறுவனத்தை உருவாக்கிய சியோபெங் ஹாங்கின் பேத்தி, மிச்செல். இவர், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடவைத்து முதலீடுகளை திரட்டுவதோடு, இந்தோனேஷியாவில் காலூன்றவும் திட்டங்களை தீட்டி வருகிறார். நூறு நாடுகளுக்கு சமையல் எண்ணெய், சோப்பு, அரிசி ஆகிய மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மிச்செல் வேதி பொறியியல் படிப்பை படித்த பட்டதாரி. 2003ஆம் ஆண்டு, குடும்ப நிறுவனத்தில் இணைந்தார். அதற்கு முன்னர் எக்சான் மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு நிறுவனத்தின் வருமானம், 64 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
டொமோகோ நம்பா
நிறுவனர், தலைவர், டிஎன்ஏ
ஜப்பான்
tomoko namba
dena
டிஎன்ஏ, இவிளையாட்டு, இவணிக நிறுவனமாக உள்ளது. 1999ஆம் ஆண்டு நிறுவிய டிஎன்ஏவின் நிறுவனர் இயக்குநராக இருந்தார். 2011ஆம் ஆண்டு இயக்குநர் பொறுப்பை விட்டு விலகி, நோயுற்ற தனது கணவரைப் பராமரிக்க சென்றுவிட்டார். நினென்டோ நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன்களி்ல விளையாட்டுகளை வடிவமைத்து மேம்படுத்த உழைத்து வருகிறது. ஜப்பான் வணிக சங்கத்தின் துணைத்தலைவர் பதவியை வகித்து வருகிறார். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் தொழிலதிபர் இவரே.
ஐமோன் சிரிவதனா பிரபா
குழும தலைவர், கிங்பவர் குழுமம்
தாய்லாந்து
aimon srivaddhana prabha
kingpower group
கிங் பவர் நிறுவனத்தின் நிறுவனர் விச்சாயின் மனைவி, ஐமோன். இவருக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். டூட்டிஃபிரி கடைகளை 1989ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்கள். தாய்லாந்திலுள்ள பத்து விமான நிலையங்களிலுள்ள நான்கு வணிக பரப்பை ஐமோன் நிர்வாகம் செய்துவருகிறார். வணிக மால்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள் என நிறுவனத்தின் சொத்து விரிவாகிக்கொண்டே செல்கிறது. மேலும் இரண்டு கடைகளை 86 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
சியோன் ஹீகிம்
துணைத்தலைவர், இயக்குநர், மேயில் டைரிஸ்
தென்கொரியா
seonheekim
maeil dairies
கொரியாவில் பால் பவுடரை தயாரித்து வரும் புகழ்பெற்ற நிறுவனம் மேயில். உலகளவில் தென்கொரியாவில் குழந்தை பிறப்புவிகிதம் குறைவாக உள்ள நாடாக மாறிவிட்டது. இதன் அர்த்தம், பால் பவுடரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் குறைந்துவிட்டனர் என்பதே. ஆனால், சியோன் ஹீகிம் மனம் தளரவில்லை. இந்த சவாலான நேரத்திலும் புதிய வாய்ப்புகளைத் தேடினார். அதுதான் பிறப்புவிகிதம் குறைந்துவிட்டது. அப்போது வயதானவர்கள் இருப்பார்களே, அவர்களைப் பிடிப்போம் என முடிவெடுத்தார். வயதானவர்கள் உடல்நலம் காக்க பால் பருகுங்கள் என விளம்பரப்படுத்தி கம்பெனியை காப்பாற்றி இருக்கிறார். 1969ஆம்ஆண்டு நிறுவப்பட்ட நிறுவனம், கடந்த ஆண்டு வரை 1.4 பில்லியன் டாலர்கள் வருமானத்தை பார்த்துள்ளது.
fortune asia
கருத்துகள்
கருத்துரையிடுக