சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

 

 

 

 




சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள்.

1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோற்கடித்த காலத்திலேயே காங்கிரஸ் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்து பேரினவாத கட்சித்தலைவரான வாஜ்பாயுடன் சேர்ந்துகொண்டு பிரதமரான நேருவுக்கு எதிராக பேசினார்கள், சமரசம் செய்துகொண்டாரா என விமர்சித்தார்கள்.

பிறகு வாஜ்பாய் காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதை எதிர்க்காதிருக்கும் பொருட்டு அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, அக்கடிதம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதில், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அணுகுண்டு சோதனை அவசியம் என இந்திய பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக கூறியிருந்தார். அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கூட சீனா எதிரி நாடுகளில் முதன்மையானது என பேட்டியைத் தட்டிவிட்டார். பிறகு அதை தொடர்புடையவர்களே மேலுக்கு வராமல் அழுத்தினர் என்பது வேறு கதை.

இந்திராகாந்தி காலத்தில் சீன நாட்டுடனான உறவு சீரானது. அடுத்த பிரதமரான ராஜீவ்காந்தி, சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருதரப்பிலும் வணிக உறவுகள் தொடரத்தொடங்கின. வணிக உறவு என்று பார்த்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருநாடுகளும் வணிகரீதியாக ஒன்றுபட்டவை. இந்து பேரினவாத கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, பேச்சளவில் நட்பு என்றாலும் வாஜ்பாய் சீனாவை சந்தேகமாகவே பார்த்தார். சீனர்கள் இந்தியாவுக்கு வர விசா அளிக்க இருபத்தியொருநாட்கள் தேவைப்பட்டன. இக்காலத்தில் சீனா, நான்கு நாட்களில் டெல்லியில் இருந்து சீனாவுக்கு வர விசா கொடுத்து வந்தது. சீனாவின் முதலீடுகள் மீது நெருக்கடி அளிக்கப்பட்டன. புகழ்பெற்ற ஹூவாய் நிறுவனம், பெங்களூருவில் தனது நிறுவனத்தை அமைத்து ஐநூறு பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தியது. அதையும் இந்திய அரசு சந்தேகமாக பார்த்தது. 2004ஆம் ஆண்டு இந்தியா - சீனா வணிக மதிப்பு பத்து பில்லியன் டாலர்களாக இருந்தது. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்