ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

 

 

 

 

 

 


 powerful womens asia fortune asia 2024(not included india)

siyun chen
bristol myers squibb

பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.


sung suk suh
cosmax
தலைவர், துணை நிறுவனர்
சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது.

கலீஜா இஸ்மாயில்
குழும நிதித்துறை தலைவர், மே வங்கி
மலேசியா

நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளாக நிதித்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இது கொஞ்சம் அதிக காலம்தான். கலீஜா, வாடிக்கையாளர் உறவு மேலாளராக தனது தொழில்வாழ்க்கையைத் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு மே வங்கியில், நிதித்துறை கட்டுப்பாட்டாளராக வேலைக்குச் சேர்ந்தார். 2021ஆம் ஆண்டு, குழும நிதித்துறை தலைவராக உயர்ந்தார். வங்கியை உலகளவில் பல்வேறு நாடுகள் அணுகும் விதமாக மாற்றியது கலீஜாவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தென்கிழகு ஆசிய நாடுகளில் மே வங்கியின் சேவையைப் பெறமுடியும். பத்து நாடுகளில் சேவை வழங்கப்படுகிறது. வங்கியில் உள்ள பெண்கள் கவுன்சிலின் துணைத்தலைவராக கலீஜா உள்ளார். பெருந்தொற்று காலத்தில் கடன்களை வசூலிப்பதில் காட்டிய அணுகுமுறை வங்கிக்கு புகழைத் தேடிக்கொடுத்தது.

ஜோன் டான்
நிதித்துறை துணைத்தலைவர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர்
இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஜோன்தான் முதல் பெண் நிதித்துறை தலைவர். இதற்கு முன்னர் நிறுவனத்தின் சந்தை திட்டமிடல், பெருந்தொற்று கால மீட்பு ஆகிய பணிகளை செய்து வந்தார்.ஜோனின் திட்டமிடல், உழைப்பு காரணமாக பெருந்தொற்று தடைகள் அகற்றப்பட்டபிறகு, நிறுவனம் பழைய நிலைக்கு திரும்ப உதவியது.

யூமிகோ டகானோ
தலைவர், இயக்குநர் ஓரியன்டல் லேண்ட்
ஜப்பான்

டிஸ்னியின் அங்கீகாரம் பெற்ற பூங்காவாக ஒரியன்டல் லேண்ட் மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு நிறுவனத்தின் தலைவராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். நிறுவனத்தின் வணிக மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக உள்ளது. பூங்காவில் புதிய வசதிகளை மேம்படுத்த திட்டங்களை தீட்டி வருகிறார் யூமிகோ.

சுசித்ரா லோகியோ
குழும துணைத்தலைவர்
இந்திரோமா வென்ச்சர்ஸ்
தாய்லாந்து

இந்த நிறுவனம் வேதிப்பொருட்களை விற்கும் குடும்பவழி வந்தது. சுசித்ராவின் கணவர் அலோக் லோகியா, நிறுவனத்தை தொடங்கி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு 15.6 பில்லியன் டாலர்களை வருமானமாக சம்பாதித்துள்ளது. உலகில் பயன்படுத்தும் பெட் பாட்டில்களில் ஒன்று, இந்திரோமா நிறுவனத்தின் வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கை தயாரித்து வருமானம் சம்பாதித்து வருகிற நிறுவனம்.

டாங் மிங்சூ
தலைவர் க்ரீ எலக்ட்ரிக் அப்ளையன்சஸ்
சீனா

தொண்ணூறுகளில் க்ரீ நிறுவனத்தில் பொருட்களை விற்பவராக வேலைக்கு சேர்ந்தார் மிங்சூ. இந்த நிறுவனம், சீனாவில் ஏர் கண்டிஷனர்களை தயாரிப்பதில் புகழ் பெற்றது. 2012ஆம் ஆண்டு மிங்சூ, க்ரீயின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பிறகுதான், நிறுவனம் பல்வேறு உற்பத்திப் பொருட்களை தயாரித்து சந்தையில் முன்னுக்கு வந்தது. உலகளவில் 44 முக்கியமான தொழில்நுட்பங்களை க்ரீ தன்வசம் கொண்டுள்ளது. இதில் தூய ஆற்றல் உற்பத்திக்கு ஆதாரமானவை 41 தொழில்நுட்பங்கள். கடந்த ஆண்டு வருமானம் 4.1 பில்லியன் டாலர்களாக உள்ளது.

ஜூங் இ லீ
இயக்குநர், வீடு, உடல்நலம் துறை, எல்ஜி
தென்கொரியா

எல்ஜி நிறுவனத்தில் 1986ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். துறை இயக்குநரானது 2022ஆம் ஆண்டு. வூ அழகுசாதனப் பொருட்கள், டொரிடா ஆற்றல் குளிர்பானம் ஆகியவற்றை சந்தைப்படுத்தி கடந்த ஆண்டு மட்டும் 5 பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்றுத்தந்துள்ளார். அழகுசாதனப் பொருட்களை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விற்க திட்டமிட்டுள்ளது எல்ஜி.

மிராண்டா க்யூ
அதிபர், ஷியாவோஹாங்சூ

இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், எக்ஸ், ட்ரிப் அட்வைசர் என பலதையும் மிக்சியில் கலந்து அடித்தால் அதுதான் மிராண்டா தொடங்கி ஷியாவோஹாங்சூ சமூக வலைத்தளம். சீன இளைஞர்கள் 300 மில்லியன் பயனர்களில் பெரும்பான்மையாக உள்ளனர். பொருட்களை வாங்குவது, சுற்றுலா செல்வது என ஆப் தற்போது மாறியுள்ளது. கடந்த ஆண்டு 500 மில்லியன் வருமானம் பார்த்துள்ளது. நடப்பு ஆண்டில் 17 பில்லியன் முதலீடு வந்துள்ளது.

ராபினா கோகோங்வெய் பெ
தலைவர், இயக்குநர், ராபின்சன்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்க்ஸ்
பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்சில் அம்மணியையும் அவரது அப்பாவையும் தெரியாத வணிக வட்டார ஆட்களே இருக்கமாட்டார்கள். அப்பா, சிறிய கடையைத் தொடங்கி அச்சாரம் போட்டார். மகள் அதை பெரியளவு விரிவுபடுத்தியுள்ளார். பேரங்காடி, மருந்துக்கடை, செல்லப்பிராணிகளுக்கான உணவுக்கடை என கடைகள் பல்வேறு வகையாக மேம்பட்டுள்ளன. பிலிப்பைன்சில் மட்டும் 2400 கடைகள் சொந்தமாக உள்ளன. பிரான்சைஸ் வகையில் இரண்டாயிரம் கடைகள் நடக்கின்றன. கடந்த ஜனவரியில் நிறுவனத்தின் இயக்குநரானார். ஜேஜி சுமிட் ஹோல்டிங்க்ஸ், செபு பசிபிக் ஏர் ஆகிய நிறுவனங்களில் போர்டில் அங்கம் வகிக்கிறார்.

 

 

 

 

 

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://fortune.com/asia/ranking/most-powerful-women-asia/2024/sung-suk-suh/&ved=2ahUKEwjuw9ipzJWJAxVys1YBHfSiGoUQh-wKegQIGhAC&usg=AOvVaw3L24zM4gaYg3PjKBEk2Ujm

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்