இடுகைகள்

அகழாய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் ட்ரோன்கள் !

படம்
  தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவும்  ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.  Digging n

அகழாய்வில் ட்ரோனின் பங்கு என்ன?

படம்
  அகழாய்வுக்கு உதவும் ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.  Digging now starts i

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோழன் யார்?

படம்
அட்லஸ் அப்ஸ்குரா ஸ்காட்லாந்தின் ஆர்க்னேயில் புதுமையான தொல்பொருள் புதுமை அரங்கேறியுள்ளது. தொல்பொருள் படிமத்திலிருந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த நாயின் முகத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர். மனிதனோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நண்பனாக புழங்கி வரும் அடிமை விலங்கு நாய் மட்டுமே. காலத்திற்கேற்ப மனிதர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் மட்டுமே நாய் தாக்குப்பிடித்து வாழ்கிறது. இதைப்போல மற்றொன்றைக் குறிப்பிடலாம். பறவைகளில் அது காக்கை. ஐரோப்பிய சாம்பல் ஓநாயை ஒத்த உடல் அமைப்பைக் கொண்ட நாய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் குவீன் கைர்ன்  எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நாயின் மண்டை ஓடு தொடர்பான படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டது. மேற்சொன்ன இடத்திலுள்ள கல்லறையில் நிறைய நாய்களின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா