இடுகைகள்

தி.ஜா நூற்றாண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலத்தின் புழுதி படியாத லட்சியவாத நாவல்! - உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்

படம்
      தி.ஜானகிராமன்   உயிர்த்தேன்  தி.ஜானகிராமன்  பொதுமுடக்க காலத்தில் இந்த நூலை படிப்பவர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்படும். காரணம், இந்த நாவலில் கூட நாயகன் சென்னையிலிருந்து போதுண்டா பாண்டுரங்கா என்று தந்தை வாழ்ந்த சொந்த ஊரான ஆறுகட்டிக்கு வந்து வாழ்கிறார். அங்கு வரும் பிரச்னைகளை சமாளிக்கிறார். பூவராகவன் காகிதங்களை விற்கும் தொழில் செய்து அவரது அப்பா சம்பாதிக்காத அளவு, ஏன், பூவராகவனே நினைத்துப்பார்க்கமுடியாத காசு கொட்டுகிறது. சரியான முதலீடு செய்தால் உழைக்காமல் பணம் கிடைக்கும் அல்லவா? அதேதான். பணம் கிடைத்தாலும் மனத்தில் நிம்மதி இல்லை. ஊரில் உள்ள பெருமாள் கோவிலை புனருத்தானம் செய்ய அவரது அப்பா முயல்கிறார். ஆனால் பிராப்தமின்றி சில நாட்களிலேயே உயிர் துறக்கிறார். அந்த ஆசையை மகன் பூவராகவன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் மையக்கதை. ஜானகிராமனின் மற்ற கதைகளை விட இந்தக் கதை தீவிரமான லட்சியவாத தன்மை கொண்டது. சமூகத்திற்கு உழைக்கும் ஆன்மாகவாக பூவராகவன் உருவாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் அப்பா காரணமாக இருக்கலாம். அவரது சூழல் அப்படித்தான். அவரது வருகையால் உயிர்ப்பு பெறும் முக்கியமான பாத்திரம் செங