இடுகைகள்

வள்ளல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

chapter 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்!

படம்
  அத்தியாயம் 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள் உலகம் முழுக்கவே அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியை வழங்குவது போல தெரிந்தாலும் அதெல்லாம் வெளிப்படையான விஷயம் அல்ல. பெரும்பாலான தொழிலதிபர்கள், அவர்களது அறக்கட்டளை வழியாகவே நிதியை மடைமாற்றம் செய்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். விருதுகளை உருவாக்கி வழங்கினாலும் கூட சிறந்த சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்களை தங்களது நிறுவனத்திற்கென பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, பணத்தை நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான், இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கவேண்டும்.  ஹே ஷியாங்ஜியான் வயது 81 மிடியா குழுமம் சீனா பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் சீன தொழிலதிபர். 410 மில்லியன் டாலர்களை தனது ஹே சயின்ஸ் பவுண்டேஷன் வழியாக அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட முன்வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, உடல்நலம், காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிதியின் வழியாக நடைபெறவிருக்கிறது. 21.7 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர், தனது ஆராய்ச்சியின் வழியாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சீனாவுக்

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன

பெமினா - தலைமைத்துவ ராணிகள் - நடிகை , தொழிலதிபர், எழுத்தாளர்

படம்
              தலைமைத்துவ ராணிகள் ! சாய் தம்ஹாங்கர் திரைப்பட நடிகை இவர் விருது பெற்ற நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் மாநில அளவிலான கபடி விளையாட்டு வீரர் . தற்போது தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார் . சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட அதனை அவர் தனக்கான பெரிய வாய்ப்பாக கருதுவதில்லை . பொழுதுபோக்குத்துறை தன்னைத் தேர்ந்தெடுத்தது என்று கூறுகிறார் . கல்லூரியில் படித்தபோது நாடகத்தில் நடித்தவர் பின்னாளில் சினிமாவில் நடித்தபோதும் தான் செய்யும் விஷயங்களை தனித்தன்மையுடனும் விருப்பத்துடனும் செய்து வந்திருக்கிறார் . கல்லூரி காலத் தோழியின் உதவியுடன் சாரி ஸ்டோரி என்ற கடையைத் தொடங்கியுள்ளார் . புடவை என்பது இந்தியப் பெண்களின் தனித்தன்மையை உலகிற்கு சொல்லுவது என தனது தொழில்முயற்சியை விவரிக்கிறார் . இவரை நாம் இங்கு எழுதுவதற்கு காரணம் , இவரால் பல்வேறு செயல்பாடுகளை செய்யமுடிகிறது என்பதும் அதனை சிறப்பாக செய்துவருகிறார் . கல்லூரி கால தொழில்முனைவு ஐடியாவை தான் சினிமாவில் சிறப்பாக நடித்தாலும் கூட பின்பற்றி வருகிறார் . படங்கள் , புகைப்பட படப்பிடிப்பு , த

அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்

படம்
                  வள்ளல் பணக்காரர்கள் ஹியூ டங் சூ ஜிஎஸ் கால்டெக்ஸ் - தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார் . அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் . எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ , 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது . இதன் தலைவர் ஹியூ டங் சூதான் . 1973 இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார் . இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது . இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார் . இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் . ராபர்ட் என்ஜி , பிலிப் என்ஜி ராபர்ட் என்ஜி - சினோ குழுமம் பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன் இருவருமே சகோதரர்கள் . என்ஜி டெங் பாங் பௌண்டேஷன்

சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்

படம்
          உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள் ! பாம் நாட் உவாங் வின் குழுமம் வியட்நாம் பாம் , 2006 ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர் . இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார் . இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது , மருத்துவ மையங்களை அமைப்பது . நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார் . இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு , வின் குழுமம் கோவிட் -19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் . வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம் , வாகனங்கள் தயாரிப்பு , ரியல் எஸ்டேட் , தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார் . ததாசி யானாய் ஃபாஸ்ட் ரீடெய்லிங் ஜப்பான் இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது . இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டாலர்களை நாட்டின் பல்க்கலை

உலகம் போற்றும் வள்ளல்கள்!

படம்
பில்கேட்ஸ், வாரன் பஃபட் மட்டுமல்ல தன்னளவில் உலகில் பல்வேறு விஷயங்களுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கும் பணக்கார ர்கள், தொழிலதிபர்கள் உலகம் முழுக்க உண்டு. அவர்களைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் அட்டவணைப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம். அசீம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத் தலைவர் 7.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பல்வேறு சமூகத்திற்கு அவசியமான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜூலையில் விப்ரோ நிறுவன தலைவர் பணியிலிருந்து விலகினார். காந்தி மூலம் ஊக்கம் பெற்ற இவர், தன் வாழ்நாளில் 21 பில்லியன் டாலர்களை சமூகத்திற்காக அளித்துள்ளார். தியோடர் ராச்மட் - திரிபுத்ரா குழுமம் இந்தோனேசியா விவசாயம் சார்ந்த, சுரங்கம் போன்ற தொழில்களை ஏ அண்ட் ஏ ராச்மட் என்ற நிறுவனம் மூலம் செய்து வருகிறார். கல்வி, ஆதரவற்றோருக்கான உதவிகளை சர்வீஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார். இந்த வகையில் 5 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார்.  1999ஆம் ஆண்டு மாணவர்களுக்கு