இடுகைகள்

பாக். மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!

படம்
ஆரிஃப் ஆஜாகியா , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் . பாகிஸ்தானின் சட்டங்கள் மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆரிஃப் . தற்போது வெளிநாட்டில் வசிப்பவர் , தாய்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக் கண்டித்துப் பேசி வருகிறார் . பாகிஸ்தானில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறீர்கள் . அங்கு நடைபெறும் முக்கியமான பிரச்னையாக எதனைக் கூறுவீர்கள் ? அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்கள் , செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை . ராணுவத்தின் சொல்படி நடப்பவர்தான் அங்கு பிரதமராக முடியும் . பாக் . ராணுவம் சிந்து , பலுசிஸ்தான் , கைபர் பக்துன்காவா ஆகிய பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளனர் . அங்கு சுதந்திரமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது . குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமை முறை , பாலியல் தொழில் , குழந்தைகளின் மீதான வன்முறை ஆகியவை பாக்கில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது . மசூதிகளிலும் மதராசாக்களிலும் இதுபோன்ற அநிதீகள் நடந்தாலும் , அவை இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல . பாக்கில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் ந