இடுகைகள்

உலகம்-வெனிசுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் அதிகரிப்பதன் பின்னணி!

படம்
வெனிசுலா அவலம் ! லிஸ்பெத் பெரெஸின் குழந்தையின் எடை 2.2 கி . கி . உலக சுகாதார நிறுவனத்தின் இயல்பான குழந்தையின் எடையைவிட 13% குறைவு . குழந்தைக்கு வயிற்றுச்சுவர் தாண்டி வெளியே குடல் வளரும் பிறப்புக்குறைபாடு வேறு . லிஸ்மேரி பத்து நாட்களிலேயே தொற்றுநோயால் மரணித்தாள் . 2013 ஆம் ஆண்டிலிருந்து வெனிசுலாவில் குறைந்த எடை குழந்தைகளின் மரணம் நிகழ்ந்து வருகிறது . வாதம் , ஊட்டச்சத்துக்குறைபாடு , மனநலம் கற்றல் குறைபாடு கொண்டவர்களாகவே குறைந்த எடை குழந்தைகள் வளருவார்கள் என்பது மருத்துவர் பெட்ரோ பானெய்ட்டின் வாக்குமூலம் . பாலசியஸ் குழந்தைகள் மருத்துவமனையில் எடைகுறைந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2016 ஆம்ஆண்டு 11.2% -16% உயர்ந்தது . தாய்மார்களே ஒருவேளை உணவுக்கு தடுமாறும் நிலையில் குழந்தைகளுக்கு சத்தான உணவு சாத்தியமா ? மே 2017 இல் வெளியான குழந்தை இறப்பு விகிதமும் 66% எகிறியுள்ளது . அரசு விட்டமின் , ஊட்டச்சத்து பொருட்களை தருவதாக கூறினாலும் ஐந்து வயதுக்குட்பட ஊட்டச்சத்து குறைவுக்குள்ளான குழந்தைகளின் அளவு 16.7% அதிகரித்துள்ளது உண்மையை சொல்லுகிறது . .