ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் அதிகரிப்பதன் பின்னணி!



Image result for venezuela crisis



வெனிசுலா அவலம்!

Image result for venezuela child malnutrition


லிஸ்பெத் பெரெஸின் குழந்தையின் எடை 2.2 கி.கி. உலக சுகாதார நிறுவனத்தின் இயல்பான குழந்தையின் எடையைவிட 13% குறைவு. குழந்தைக்கு வயிற்றுச்சுவர் தாண்டி வெளியே குடல் வளரும் பிறப்புக்குறைபாடு வேறு. லிஸ்மேரி பத்து நாட்களிலேயே தொற்றுநோயால் மரணித்தாள். 2013 ஆம் ஆண்டிலிருந்து வெனிசுலாவில் குறைந்த எடை குழந்தைகளின் மரணம் நிகழ்ந்து வருகிறது.

வாதம், ஊட்டச்சத்துக்குறைபாடு, மனநலம் கற்றல் குறைபாடு கொண்டவர்களாகவே குறைந்த எடை குழந்தைகள் வளருவார்கள் என்பது மருத்துவர் பெட்ரோ பானெய்ட்டின் வாக்குமூலம். பாலசியஸ் குழந்தைகள் மருத்துவமனையில் எடைகுறைந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2016 ஆம்ஆண்டு 11.2% -16% உயர்ந்தது. தாய்மார்களே ஒருவேளை உணவுக்கு தடுமாறும் நிலையில் குழந்தைகளுக்கு சத்தான உணவு சாத்தியமா? மே 2017 இல் வெளியான குழந்தை இறப்பு விகிதமும் 66% எகிறியுள்ளது. அரசு விட்டமின், ஊட்டச்சத்து பொருட்களை தருவதாக கூறினாலும் ஐந்து வயதுக்குட்பட ஊட்டச்சத்து குறைவுக்குள்ளான குழந்தைகளின் அளவு 16.7% அதிகரித்துள்ளது உண்மையை சொல்லுகிறது. .