ஆப்பிள் 12 இல் புதிய வசதி என்ன?
IOS 12!
ஆக்மென்டட் ரியாலிட்டி முறையில் இயங்க ஏதுவாக ஆப்பிள்
ஐஓஎஸ்
12, பிக்ஸாருடன் இணைந்து USDZ கோப்புகளை பயன்படுத்துகிறது.
இதிலுள்ள ஆப் மூலம் நம்மைச்சுற்றியுள்ள எந்த பொருட்களின் அளவுகளையும்
எளிதாக அறிய முடியும்.
குறிப்பிட்ட நாளில் எடுத்த போட்டோக்களை ஐக்ளவுட்
லைப்ரரியில் தேடுவதும், தொகுப்பதும் போட்டோ ஆப்பில் மிக
எளிது. இதிலுள்ள ஆர்க்கிட் 2.0 விளையாட்டுகளை
ஐஓஎஸ் 11 யைவிட துல்லியமாக்கியுள்ளது.
சிரியை ஷார்ட்கட் மூலம் இயக்குவதோடு, ஆப்பிள் வாட்ச், ஹோம்பாட் மூலமும் இயங்கச்செய்யலாம்.
ஐபுக்ஸ் ஆப்பிள் புக்ஸாக நவீனமாகி வாசித்த நூலின் பக்கம் உட்பட துல்லியமாக
தேடித்தருகிறது.
டுநாட் டிஸ்டர்ப் வசதியை டைம் செட் செய்து பயன்படுத்த
முடியும்.
இரவு தூங்கும் நேரத்தில் நோட்டிஃபிகேஷன்களை வராமல் சமாளிக்கவும் இந்த
வசதி உதவுகிறது. நோட்டிஃபிகேஷன்களை தொகுத்து வைத்து படித்தபின்
அழித்துவிட முடியும்.
ஆப்பிளிலில் அனிமோஜி மெமோஜி ஆகியவற்றில் புதிய வரவுகளும்
உண்டு.
சாம்சங்கின் ஏஆர்இமோஜியைப் போலவே மெமோஜியை நிறம், எழுத்து, தோற்றம் என பலவற்றையும் மாற்றி ஆக்மென்டட் ரியாலிட்டியில்
விளையாடலாம்.