50 ஆயிரம் சிறுதொழில்கள் மூடப்பட்டதன் காரணம் என்ன?
குறுந்தொழில்களை கொன்ற ஜிஎஸ்டி!
தமிழ்நாட்டில் கடந்த
30 மாதங்களில் வார்தா புயல், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட பிரச்னைகளால் 50 ஆயிரம் குறுந்தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன என
சிறு,குறு தொழில்துறை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
2016-17 ஆண்டில் தமிழ்நாட்டில் 2.67 லட்சம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவந்தன. தற்போது அதில் அதன் எண்ணிக்கை
2.18 லட்சமாக சுருங்கிவிட்டது. இதில் பணியாற்றிய
5 லட்சம் பேரின் வேலையும் பறிபோயுள்ளது. "8-10 சதவிகிதம் பேர் மட்டுமே வங்கி நிதியுதவி பெற்று தொழில் தொடங்கியவர்கள்.
பிற தொழில்முனைவோர் அனைவரும் தனியார் நிதிபெற்றவர்கள். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் ஆகிய சிக்கல்களில் சிறுகுறு தொழில்கள் தடம்புரண்டுவிட்டன" என்கிறார் சிறு மற்றும் குறு தொழில்(TANSTIA)
சங்கத்தலைவரான சி.கே.மோகன். உத்யோக் ஆதார் மெமோரண்டம்(UAM)
தகவல்களை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிறது அரசுத்தரப்பு. தொழில்துறைக்கான வங்கி மற்றும் அரசு உதவிகளும் எளிதில் கிடைக்காதது முக்கியக்காரணம் என்கிறது தொழில் வட்டாரம்.