இடுகைகள்

சாரு நிவேதிதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் இலக்கிய முன்னோடிகளை அறிமுகப்படுத்தும் நூல் - பழுப்பு நிற பக்கங்கள்(1) - சாரு நிவேதிதா

படம்
  பழுப்பு நிற பக்கங்கள் -1 சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் ஜீரோ பப்ளிஷிங் கட்டுரைகள் இந்த நூலில் மொத்தம் 18 முன்னோடி எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், தினமணி கதிரில் தொடராக வந்திருக்கிறது. பிறகு, அதை எழுத்து பிரசுரம் நூலாக மாற்றியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்கள். நூல் ஒவ்வொன்றும் 400 ரூபாய் வருகிறது. காசுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். காசில்லாதவர்கள், வாங்கியவர்களிடம் இரவல் வாங்கி வாசிக்கலாம். அறியாமைத் திமிர் உள்ளவர்கள் நூலை தவிர்க்கலாம்.  நூலைத் தொடங்கி வைப்பது சார்வாகன். இவர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஊனத்தை சரி செய்யும்அறுவை சிகிச்சை முறையைக் கற்றவர். அதற்காக பத்மஶ்ரீ வாங்கியவர். இயற்பெயர் ஶ்ரீனிவாசன். எழுதியுள்ள கதைகள் பார்த்தாலும் சிறப்பாகவே உள்ளன. இவர்தான், பாகம் ஒன்று நூலைத் தொடங்கி வைக்கிறார். பிறகு, அப்படியே திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் - தி.ஜ.ர, கு.அழகிரிசாமி, திரு.வி.க என்று நீண்டு செல்கிறது. தி.ஜ.ர பற்றி எழுதியுள்ளது ஆர்வமூட்டுவதாக உள்ளது. கட்டுரைகளுக்கு முக்கிய பங்களித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ...

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆறு ஆளுமைகளைப் பற்றிய வசீகர கட்டுரைகள்

படம்
                 தீராக்காதலி - சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் இந்த நூல் ஆறு முக்கியமான சினிமா ஆளுமைகளை நம் கண் முன் வைக்கிறது. அவர்களது வாழ்க்கையை நாம் திரைப்படம் போல பார்க்கிறோம். அதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தும் பேருதவி புரிகிறது. இவரது அற்புதமான எழுத்தாக்கத்தில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, எஸ் ஜி கிட்டப்பா, எம்ஜிஆர், எம்ஆர் ராதா, கேபிஎஸ் ஆகியோரின் வாழ்க்கையை வாசிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. நூலை படித்து முடித்து பதினைந்து நாட்களுக்கு பிறகு எழுதுவதால் சில விடுபடல்கள் இருக்கலாம். பொறுத்தருள்க. தீராக்காதலி என்பது கொடுமுடி பாலாம்பாள் கோகிலம், எஸ் ஜி கிட்டப்பாவின் மீது வைத்த காதலை அடிப்படையாக கொண்ட தலைப்பு. அதுவே நூல் தலைப்பாக இருப்பது சிறப்புதான். இதற்கான காரணம் கொடுமுடி கோகிலம் பற்றி சம்பவத்தை வாசிக்கும்போது வாசகர்கள் அறிய முடியும். மூன்று ஆண்டுகள்தான் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆனால், கோகிலம் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கணவர் மீது பாகுபாடு இல்லாத எந்த இடத்திலும் குன்றாத மரியாதை, அன்பு, காதலை சாருவின் எழுத்த...