பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!
பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம் என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம். பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...