உடல் பருமன் ஆபத்து, ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் விளைவுகள் - மிஸ்டர் ரோனி

 

 

 

 




 

 

அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

உடல் பருமன் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது?

பொதுவாக, குழந்தைகள் கொழு கொழுவெ இருப்பதை ரசிக்கிறார்கள். ஆனால் வயதுக்கு மீறிய உடலின் செழுமை எப்போதுமே ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், டைசிலிபிடெபியா, இரண்டாம் நிலை நீரிழிவுநோய், இதயநோய்கள், வாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், மூச்சு விடுவது தொடர்பான நோய்கள், புற்றுநோய் ஆகியவை உடல்பருமனால் உண்டாகின்றன.

ஒருவரின் ரத்தத்தில் அதிகரிக்கு்ம ஆல்கஹால் அவரின் உடல், இயல்பில் மாற்றம் ஏற்படுத்துமா?

ரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்ஹால் என்பது ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக கொண்டது. மதுபானம், மதுபானம் சார்ந்த பல்வேறு பானங்களும் இந்தளவில்தான் உடலைப் பாதிக்கிறது. ஆல்கஹால் என்பது எத்தில் ஆல்கஹால் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதன் தூய்மையான தன்மையைப் பொறுத்து ஒருவரின் இயல்பு மாறும். இப்போது அதன் அளவு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

0.02-03 சதவீதம் அதிகரித்தால் ஒருவரால் சரியாக யோசிக்க முடியாது, உடலின் ஒத்திசைவு மாறும்.
0.05 சதவீதம் அதிகரித்தால், மயக்கம் உருவாகும்
0.08-0.10 என்ற அளவை அமெரிக்க மாகாணங்கள் மது அருந்தி போதையில் இருக்கிறார் என வரையறுத்துள்ளன.
0.15-0.20 சுயநினைவை இழக்கத் தொடங்குகிற தொடக்க நிலை
0.30-0.40 சுயநினைவை முழுமையாக இழந்த நிலை
0.50 இதயம், நுரையீரல் என இரண்டுமே தனது இயக்கத்தை நிறுத்திவிட்ட நிலை. இதன்பிறகு என்ன? சவத்தை தூக்க ஆளை கூப்பிட்டு சொல்லிவிட வேண்டியதுதான்.

  படங்கள் 

பிக்சாபே

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்