சுற்றுலா செல்லும் பயணிகள் கொடுக்கும் வருமானம்!

 

 

 

 


 

சுற்றுலாப் பயணிகளுக்கான நாடுகள்

சுற்றுலா செல்பவருக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. போகும் நாடுகளில் செலவழித்தால், அந்த நாடுகளுக்கு வருமானம் கூடுகிறது. பதிலாக சுற்றுச்சூழல் பிரச்னைகள், உள்ளூர் மக்களுக்கு தொந்தரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை ஓவர் டூரிசம் என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் தலைநகரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதை எதிர்த்து சுவரின் கிராபிட்டி வரையப்பட்டு வருகிறது.

நாடுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு கவனம் கொடுத்து வேலைகளை செய்பவர்கள் குறைவு. எனவே, வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப நகரங்களில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். உள்ளூர் மக்களுக்கு குறைந்த தொந்தரவு கொடுத்து, அதிக காசை வீசியெறிந்துவிட்டு செல்கிற சுற்றுலா பயணிகளே அதிகம் தேவை.

2023ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை வந்த நாடு என்ற வகையில் லண்டன், டோக்கியோ நகரங்கள் பந்தயத்தில் முந்துகின்றன. இவை தலா 20 மில்லியன் பேர்களை ஈர்த்திருக்கிறது. ஹோட்டல் வாடகை, வரி, கப்பல் பயணம் ஆகியவற்றை அதிக செலவினம் காரணமாக சுற்றுலா பயணிகள் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் தங்கி செலவு செய்த வகையில் துபாய், லண்டன் ஆகிய நகரங்கள் 29 பில்லியன், 21 பில்லியன் என முன்னிலை வகிக்கின்றன. ஜப்பானின் ஒசாகாவில் குறைந்த சுற்றுலா பயணிகள், அதிக செலவினம் என்ற அளவில் ஈர்க்கிறார்கள். அங்குள்ள மக்களில் ஒருவருக்கு தலா 4900 டாலர்கள் என்ற ரீதியில் செலவு செய்திருக்கிறார்கள். இதற்கடுத்தபடியாக மேட்ரிட் நகரம் உள்ளது. ஜப்பானின் தொன்மையான இரண்டாவது நகரமாக ஒசாகாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதித்து பயணிகள் வரவைக் கட்டுப்படுத்தலாமா என அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.

எகனாமிஸ்ட்
தமிழாக்க கட்டுரை
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்