நூறு கிராம் முதுகெலும்பு!

 

 

 

 



நூறு கிராம் முதுகெலும்பு!

மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார்.

எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.  

என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை.
இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார்.
வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்