பங்குச்சந்தை மோசடியின் வலைப்பின்னல் - அதானி குழும மோசடியில் செபிக்கு உள்ள கூட்டுப்பங்கு

 

 

 

 

 




 


பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள போலி நிறுவனங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் பங்குச்சந்தை அமைப்பான செபி ஆச்சரியமூட்டும் விதமாக, அதானி குழும மோசடி பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விசாரணையையும் முறையாக நடத்தவில்லை.

கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் மிகப்பெரும் மோசடியான அதில், மொரிஷியஸ் நாட்டில் பரிமாறிய பங்குகள், அரசிடம் தெரிவிக்கப்படாத முதலீடுகள், பங்கு முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அதற்குப்பிறகு, அந்த விசாரணையை எங்களோடு சேர்ந்து நாற்பது தனியார் ஊடக நிறுவனங்கள் புலனாய்வு செய்து விரிவாக்கின. இந்திய அமைப்பான செபி, அதானி குழுமம் செய்த முறைகேட்டை பெரிதாக லட்சியம் செய்யவில்லை.

அதற்குப் பதிலாக செபி நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹிண்டென்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், 106 பக்க புலனாய்வு அறிக்கையில் எந்த தகவல் பிழையும் உள்ளதாக கூறவில்லை. பதிலாக, கொடுத்துள்ள விவரங்கள் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் என கூறியிருந்தது. அறிக்கையில், அதானி குழுமம், தடை செய்யப்பட்ட தரகர் மூலம் செய்த மோசடிகளை செபி அறிந்திருந்தது, மோசடிகளிலும் பங்கு வகித்தது என கூறியதை தவறு என குறிப்பிட்டிருந்தது.

இந்த நோட்டீஸூக்கு ஹிண்டென்பர்க் ஜூலை மாதம் பதில் எழுதி அனுப்பியது. பொது நிறுவனங்களைப் பயன்படுத்தி அதானி குழுமம் பங்கு முறைகேடுகளை செய்து முதலீடுகளை போலி நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதில் செபி பெரிதாக ஆர்வம் காட்டி விசாரிக்காதது வினோதமாக இருந்தது என அதில் குறிப்பிட்டது.

அதேமாதம், செபி அமைப்பு செய்த விசாரணையில் அதானி குழும பங்குதாரர்கள் பற்றி எந்த புகாரையும், முறைகேட்டையும் தெரிவிக்கவில்லை என இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆவணங்களில் கூறியுள்ளது.

அதானி குழும தலைவர் மூலம் இந்தியா இன்போலைன் என்ற நிறுவனம் மூலம் மொரிஷியசில் ஐபிஇ பிளஸ் பண்ட் என்ற சிறு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தியா இன்போலைன் நிறுவனம் ஜெர்மனியில் நடந்த வயர்கார்ட் மோசடியில் தொடர்புடையது. கௌதம் அதானியின் சகோதரர் வினோத், மேற்சொன்ன நிறுவனத்தைப் பயன்படுத்தி இந்திய பங்குசந்தையில் முறைகேடாக நிதியை கையாண்டார். இதற்கு அதானி குழுமத்தின் மின்சார பிரிவு எந்திரங்களை வாங்கும் விலைப்பட்டியலைப் பயன்படுத்தினார்.

இதுபற்றிய தகவல்கள் முன்னர் ஹிண்டென்பர்க் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் உள்ளது. வருவாய் ஒழுங்குமுறை ஆணையமான டிஆர்ஐ, அதானி குழுமம், இறக்குமதி செய்த மின்சார தொழிலுக்கான எந்திரங்களின் மதிப்பை கூடுதலாக காட்டி, இந்திய மக்களின் பணத்தை வெளிநாட்டு போலி நிறுவனங்களுக்கு கொண்டுசென்றது என்பதை அறிக்கையில் கூறியுள்ளது. 2023ஆம்ஆண்டு, தன்னார்வ தொண்டு திட்டமாக அதானி வாட்ச் தொடங்கப்பட்டது.  இதில், வினோத் அதானி, முறைகேடாக வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட போலி நிறுவனங்களை மின்சார எந்திரங்களை வாங்கிய விவகாரத்தில் எப்படி கையாண்டார் என்பது தெரிய வந்தது.

வினோத், வரிவிலக்கு கொண்ட பெர்முடாவில் குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இந்த இடம் பிரிட்டனுக்கு சொந்தமான ஆட்சிப்பகுதி. பிறகு, மொரிஷியசிலுள்ள ஐபிஇபிளஸ் பண்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். பெர்முடா நிறுவனத்திற்கு நிதியளிக்கும் தாய் நிறுவனமாக குளோபல் ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் உள்ளது. அதைப் பயன்படுத்தி அதானி நிறுவனங்கள், அதானி குழுமத்தின் பங்குகளை வணிகத்தில் ஈடுபடுத்தின. இதுபற்றிய புலனாய்வை ஃபினான்சியல் டைம்ஸ் நிறுவனம் செய்தது. இப்படியாக உள்ள பல்வேறு அடுக்கு நிதியை இந்தியன் இன்போலைன் நிறுவனம் நிர்வாகம் செய்தது.

நிதி நிர்வாகம் தொடர்பான இந்தியன் இன்போலைன் நிறுவனம், முறைகேடான பணப்பரிவர்த்தனை, மோசடிகளில் ஈடுபட்ட வரலாறு கொண்டது. முன்னர் கூறியதுபோல, ஜெர்மனியில் நடைபெற்ற மிகப்பெரிய வயர்கார்ட் மோசடியில், இன்போலைனுக்கும் பங்குண்டு. மொரிஷியஸ் நிதி கட்டமைப்பைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இங்கிலாந்தில் வழக்கு பதிவாகியுள்ளது.


2017ஆம் ஆண்டு, மொரிஷியசில் பதிவாகியுள்ள ஐபிஇ பிளஸ் பண்ட் நிறுவனத்தின் சொத்துகள் 38.43 மில்லியன் டாலர்கள் என இன்போலைன் நிறுவனம் தகவல் கூறுகிறது. ஐபிஇ பிளஸ் பண்ட் நிறுவனம், பெர்முடாவில் உள்ள குளோபல் நிறுவனத்தின் பல்வேறு அடுக்கு நிதிக்கட்டமைப்பில் கீழே உள்ளது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதப்படி, ஏடிஐஎல் என்ற வினோத் அதானி நடத்தும் நிறுவனத்தின் மொத்த இருப்புத்தொகை 40.38 மில்லியன் டாலர்களாக உள்ளது. இதில் குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் நிறுவனமும்(ஜிடிஓஎஃப்) உள்ளடங்கும். ஜிடிஓஎஃப்பின் இருப்பு, சொத்து பற்றி தகவல்கள் தெரியவில்லை. இதிலும் அதானி குழுமத்தின் நிதியே அதிகமாக இருக்கக்கூடும். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்