வெள்ளி கோள், டேசர் துப்பாக்கி, கணினி விளையாட்டு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 

 






 


அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி
வெள்ளி கோளின் தோராய வெப்பநிலை என்ன?

460 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.

1962ஆம் ஆண்டு மெரினர் 2 விண்கலம் வெள்ளி கிரகத்திற்கு சென்று தகவல்களை பதிவு செய்து அனுப்பியது. அங்குள்ள மேற்பரப்பு வெப்பநிலை 460 டிகிரியில் இருந்து 600 வரை அதிகரித்தது. இது சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளின் வெப்பநிலையை விட அதிகம். வெள்ளியில் அதிகம் உள்ள உலோகம் காரீயம். இங்குள்ள வெப்பநிலையால், காரீயம் உருகி திரவ நிலையில் உள்ளது.

பூமியை விட 90 மடங்கு அதிக அழுத்தம் கொண்டுள்ள வெள்ளியில், கார்பன் டை ஆக்சைடு தனி அடுக்காக பரவியுள்ளது. சல்ப்யூரிக் அமில ஆதிக்கத்தில் வெள்ளை நிற மேகங்கள் துலக்கமாக தெரிகின்றன. பூமியின் சுழற்சிக்கு எதிர்ப்புறமாக சுற்றிவரும் வெள்ளியில் 117 நாட்கள் சூரிய உதயத்தைப் பார்க்கலாம்.

டேசர் துப்பாக்கியின் வரலாறு என்ன?

குற்றவாளிக்கு மின் அதிர்ச்சி கொடுத்து செயலிழக்க வைத்து அவரை உயிரோடு பிடிக்க உதவுகிறது டேசர் துப்பாக்கி. இதை ஜேக் கோவர் என்பவர் உருவாக்கினார். நாசாவில் வேலை செய்த அனுபவம் கொண்டவர், டேசரை பத்தாண்டுகள் செலவிட்டு உருவாக்கி, 1974ஆம் ஆண்டு வெளியிட்டார்.
டேசர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம், இத்துப்பாக்கியை உலகம் முழுக்க விநியோகித்து வருகிறது.
டேசருக்கு தாமஸ் ஏ ஸ்விப்ட்ஸ் எலக்ட்ரிக் ரைபிள் என்று அர்த்தம். கோவர், தனது துப்பாக்கி பெயரை குழந்தைகள் நூலான டாம் ஸ்விப்ட் அண்ட் ஹிஸ் எலக்ட்ரிக் ரைபிள் என்பதிலிருந்து பெற்றார்.
குற்றவாளிகளுக்கு அவர்களுக்கு புரியும் விதமாக பதில் கொடுப்போம் என சில காவல்துறை அதிகாரிகள் கூறுவார்கள். இதன் அர்த்தம், குற்றவாளிகள் பட்டியல் ஒன்றை உருவாக்கி அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குற்றத்தையும் சேர்த்தே அழிப்பதாகும். ஆனால், டேசர் துப்பாக்கி, குறிப்பிட்ட நேரம் குற்றவாளியை செயலிழக்க வைத்திருக்கும். உயிருக்கு பெரிய ஆபத்தில்லை. அவர்களுக்கு காவல்துறையினர் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாடி கேக்கை ஊட்டி சந்தோஷப்படலாம்.


‘YOU ARE STANDING AT THE END OF A ROAD
BEFORE A SMALL BRICK BUILDING. AROUND
YOU IS A FOREST. A SMALL STREAM FLOWS
OUT OF THE BUILDING AND DOWN A GULLY’?

மேலேயுள்ள வாசகங்களுக்கு என்ன அர்த்தம்?

இது அட்வென்ச்சர் என்ற கணினி சாகச விளையாட்டில் வருகிறத தொடக்க வாசகம். கணினி பொறியாளர் வில் குரோதர் என்பவர், டன்ஜன் அண்ட் டிராகன்ஸ் என்ற விளையாட்டின் மீது ஊக்கம் பெற்று, எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு கணினி விளையாட்டை வடிவமைத்தார். இதை பட்டப்படிப்பு மாணவர் டான் வுட்ஸ் மேம்படுத்தினார். பிறகு அனைத்து கணினிகளிலும் பரவலாக விளையாடப்பட தொடங்கியது. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்