விபத்தில் சிக்குவதில் முந்துவது ஆணா, பெண்ணா?

 

 

 

 

 



 

 

அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

ஆண்கள், பெண்கள் யார் அதிகம் விபத்தில் சிக்குகிறார்கள்?

ஆண்களை விட சாலைகளை கடப்பதில் பெண்கள் விவரமானவர்கள். 1980ஆம் ஆண்டு தகவல்படி, ஆண்களே சாலைகளை கடப்பதில் அதிக விபத்துகளில் மாட்டுகிறார்கள் என தெரிய வந்துள்ளது. பதினெட்டு தொடங்கி நாற்பத்தைந்து வயது வரையிலான பிரிவில் பார்த்தாலும் ஆண்களே விபத்தில் அதிகம் சிக்குகிறார்கள். நெருப்பு, நீரில் மூழ்குவது, துப்பாக்கி, வெடிகுண்டு, கீழே விழுவது என அனைத்து விவகாரங்களிலும் ஆண்களே முன்னிலை வகித்து மாட்டிக்கொண்டு காயமடைகிறார்கள் அல்லது இறந்துபோகிறார்கள்.

புகைப்பிடிப்பதில் உள்ள ஆபத்துகள் என்னென்ன?

சினிமா பார்க்கும்போது முகேஷ் விளம்பரத்தை அனைத்து ஆட்களும் பார்க்கிறார்கள்தானே? அப்புறம் என்ன தனியாக ஆபத்துகளை பட்டியலிடுவது? புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சிகரெட்டை புகைப்பதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. பெண்களும் சிகரெட்டை புகைத்து வருகிறார்கள். அவர்களுக்கும் ஆண்களுக்கு நேரும் அனைத்துவித நோய்களும் வரும். கூடுதலாக, கருப்பை இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் சிக்கல் வரும். குழந்தை முன்கூட்டியே பிறக்கும், பிறக்கும் குழந்தைக்கு உரிய பொதுவான எடை இருக்காது. இன்குபெட்டரில் வைத்து பராமரித்தாலும் பிழைப்பது கடினம். சிகெரட்டில் நான்காயிரம் வேதிப்பொருட்கள் உண்டு. அசிட்டோன், அசிட்டிலின், பார்மால்டிஹைட், புரோப்பேன், ஹைட்ரஜன் சயனைட், டோலூன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், நிக்கோட்டின் ஆகியவை முக்கியமானவை.

மற்றபடி ஆண், பெண் என இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும். இதையெல்லாம் தெரிந்து புகைபிடிக்கிறீர்கள் என்றால் அனுபவித்து செய்யுங்கள். விழிப்புணர்வோடு இருங்கள். அதுவே வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி. புகைப்பிடித்து வெளியிடும் புகையால் அருகில் இருப்பவருக்கு நோய் வருமா இல்லையா என்பது முழுமையாக தெரியவில்லை.









 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்