கொடியை நகல் எடுக்க கூடாது!
தனித்துவம் கொண்ட கொடி!
வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும்.
கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்து என பல நாட்டு கொடிகள் நினைவுக்கு வந்து மறையும்.
கனடாவின் அகாடிய கொடியைப் பார்த்தால், நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தோடு மஞ்சள் நட்சத்திரம் ஒன்று இருக்கும். இதெல்லாம், அந்த பகுதியிலுள்ள மக்கள், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்பு.
லைபீரியா நாட்டுக் கொடியும் பார்க்க அமெரிக்க கொடியோ என நினைக்க வைத்தாலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது. கலாசாரத்தை தெளிவாக விளக்கும் தனித்துவமான கொடி. வெள்ளை நிறப் பின்னணியில் மேலாக சிவப்பு நிறப்பட்டைகள், இடது ஓரத்தில் நீலநிறப் பின்னணியில் வெள்ளை நட்சத்திரம் உள்ளது.
கொடிகளைப் பற்றிய விதிகள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். அடிப்படையில் அவை அமைப்பை, மனிதரை, நாட்டை தெளிவாக பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும். அதில் தவறிவிட்டால் கொடிக்கு எந்த மதிப்பும் இல்லை.
நாம் இதுவரை கூறியதற்கு மாறாக, ராணுவக்கொடிகளில் எண்கள் பயன்படுத்தப்படும். இதெல்லாம் குறிப்பிட்ட தேவை சார்ந்தது. இங்கு கூறப்பட்ட விதிகள் கொடிக்கம்பத்தில் பறக்கவிடும் தேசியக்கொடிகளுக்கானது.
மூலநூல்
குட் ஃபிளேக் பேட் ஃபிளேக் - டெட் கயே
கருத்துகள்
கருத்துரையிடுக