சூரியன், நிலவு பிரகாசம், ஐன்ஸ்டீனின் வேலை, திரள்மேகம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 

 




 

 
அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி

சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தபோது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்ற செய்தி உண்மையா?

இல்லை. அப்போது அவர் பெர்ன் நகரில் உள்ள சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 1905ஆம்ஆண்டு ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கையில் புகழ்பெற்ற மூன்று ஆய்வுக்கோட்பாடுகளை வெளியிட்டார். 1909ஆம் ஆண்டு, அவருக்கு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. அந்த ஆண்டில்தான் E=mc ஸ்கொயர்ட் என புகழ்பெற்ற சமன்பாட்டை கல்வி தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்தார். அப்போது அவரின் வயது முப்பது. அன்றைய காலகட்ட வழக்கப்படி, முப்பது வயதில் பெரும்பாலான அறிவியலாளர்களின் அறிவியல் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடும் காலம். ஆனால், அந்த வயதில் இருந்துதான் ஐன்ஸ்டீனின் அறிவியல் பயணம் தொடங்கியது.

க்ளவுட் நைன் என்றால் என்ன அர்த்தம்?

நேரடியான அர்த்தம் என்பது நான் மகிழ்ச்சியாக திருப்தியாக இருக்கிறேன் என்று கூறலாம்.அறிவியல் அடிப்படையில் ஆழமாக சென்றால், மேகத்தின் வகைகளில் க்ளவுட் நைனும் ஒன்று. மேகத்தில் மொத்தம் 52 வகைகள் உண்டு. 1802ஆம் ஆண்டு மேகம், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டன. சிர்ரஸ், குமுலஸ், ஸ்ட்ராடஸ் ஆகியவையே அவை. க்ளவுட்நைன் என்பது அதி உயரத்தில் உள்ள மேகம் என்று வானிலை சார்ந்து புரிந்துகொள்ளலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேகங்களின் வடிவங்களை வைத்து ஒன்றிலிருந்து ஒன்பது வரை பிரித்து வைத்து அடையாளம் கண்டனர். இதில் இடிமுழக்கம் கொண்ட மழையை உருவாக்க கூடிய மேகத்தை திரள்மேகம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் குமுலோனிம்பஸ் என்று இதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

சூரியனின் ஒளி எந்தளவு பிரகாசமானது?

நிலவு, சூரியனின் ஒளியை வாங்கித்தான் இரவில் பிரதிபலிக்கிறது. சூரியனின் ஒளி 3 லட்சம் முதல் 5 லட்சம் மடங்கு பிரகாசமானது.

சூரியன் அல்லது நிலவு என இரண்டின் முழுமையான பிரகாசத்தை நாம் உள்வாங்கிப் புரிந்துகொள்ள முடியாது. நமது கண்களை மூளை கட்டுப்படுத்துகிறது. சூரியனை அல்லது நிலவை பார்த்து அதன் பிரகாசத்தை உள்வாங்குவது, தவிர்ப்பது என்பது மூளையின் கட்டளைப்படி இயங்குகிறது. எனவே, சூரியன், நிலவு என இரண்டின் முழுமையான பிரகாசத்தை நம் கண்களால் உள்வாங்கி உணர முடியாது.
பவுர்ணமி நாளில் நிலவு ஒளிர்வதை மஞ்சள், நீலம் கலந்த ஒளியாக அடையாளம் நமது கண்கள் அடையாளம் காண்கிறது. உண்மையில் சூரியனின் ஒளியை வாங்கி பிரதிபலிக்கும்போது பழுப்பு நிறம்தான் தெரியும். ஆனால், அதே நிலவொளியை பூமியில் இரவில் பார்க்கும்போது நம் கண்களுக்கு வேறு மாதிரியான ஒளியாக தெரிகிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்