பிரச்னைகளைத் தீர்க்க எடுத்த முடிவுகளுக்காக வருந்தப்போவதில்லை!
நேர்காணல்
டேரன் வாக்கர்
நீங்கள் ஃபோர்ட் பவுண்டேஷனை விட்டு விரைவில் விலகப்போகிறீர்கள். வரலாற்றில் இந்த நேரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜனநாயகத்தில் இக்காலகட்டம் சவாலானது. நம்பிக்கைதான், ஜனநாயகத்திற்கு பிராணவாயு போன்றது. சமத்துவமின்மை, நம்பிக்கைக்கு எதிராக மாறுகிறது. நம்பிக்கையில்லாத மனிதர்கள், இதுவரை சமூகத்தில் இது சாத்தியமா என்று நினைத்துப்பார்க்காத செயல்களை செய்யத் தொடங்கியுள்ளனர். அதுதான் என்னை கவலையில் ஆழ்த்துகிறது.
ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா?
நல்ல காற்றை சுவாசிப்பீர்கள், மோசமான உணவை சாப்பிடும் சூழல் நேராது. மனிதர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நகர்வது சற்று வேறுவிதமானது. நான் ஃபோர்டை விட்டு வெளியேறுவதை மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எனக்கு மிக குறைவாகவே நண்பர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் உண்மையான நண்பர்களோடு சேர்ந்து உணவருந்துவேன்.
சம்பளத்தில் பாகுபாடு உள்ள சூழ்நிலையில், மக்கள் அதை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹென்றி ஃபோர்ட் போன்றோர் அளிக்கும் பேரளவிலான நிதி என்பது சற்று சிக்கலாக மாறுகிறது. இதைப்பற்றி உங்களுடைய கருத்தென்ன?
நாம், பணக்காரர்களை மோசமானவர்களாக நினைக்கத் தேவையில்லை. இப்படி கருதுவதை முக்கியமானதாக கருதுகிறேன். ஹென்றி ஃபோர்ட், தனது தொழிலில் வெற்றிபெற்ற அசாதாரண மனிதர். குழப்பமான குணங்களைக் கொண்டவர். அவரது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் கறுப்பின தன்பால் ஈர்ப்பு கொண்டவர் இருக்கிறார் என்றால் நிச்சயம் அதிர்ச்சி அடைவார். சமத்துவமின்மைக்கு பணம்தான் காரணமாக உள்ளது என்றால் அதை உறுதியாக எதிர்த்து போராடத்தான் வேண்டும்.
நன்கொடைகளை அளிப்பவர்கள் வரிசையில் பெண்கள் அதிகமாகி வருகிறார்களே இதில் ஏதேனும் வேறுபாடுகளைப் பார்க்கிறீர்களா?
மெலிண்டா பிரென்ச் கேட்ஸ், மெக்கென்சிஸ் ஸ்காட், லாரன்ஸ் போவெல் ஜாப்ஸ், அலைஸ் வால்டன், பார்பரா ஹாஸ்டெடர் ஆகியோர் நிறைய திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். நாங்கள் அமைப்புகளை காப்பாற்ற ஆதரவளிக்கிறோம் என கூறுகிறார்கள்.
சிறைகளை ஒழிக்க நினைக்கும் போராட்டக்காரர்கள், முன்னாள் போர்ட் நிறுவன அதிகாரிகள் உங்களை கடுமையாக விமர்சிக்கிறார்களே?
எனக்கு எதிரான போராட்டங்கள், எனது பணியாளர்களின் ஆதரவின்மை என்னைக் காயப்படுத்தியது உண்மை. சிக்கலான பிரச்னைகளில் நிறுவனத்தின் தலைவராக மதிப்புகள், கொள்கைகள் அடிப்படையில் நீங்கள் வழிநடத்தப்படவேண்டும். இதற்கிடையில் எனது வாழ்க்கைத்துணையை இழந்தேன். எனினும், பிரச்னைகளைத் தீர்க்க எடுத்த முடிவுகளுக்காக வருந்தவில்லை.
உங்களிடம் ஒரு மில்லியன் டாலர்கள் நிதி உள்ளது. அதை வைத்து இயங்கவேண்டுமெனில் என்ன செய்வீர்கள்?
ஆபத்தை தவிர்க்கும் வகையில், தீர்க்கும்படி கொள்கை, தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க வேண்டும். பாகுபாடு, தீண்டாமை, நேர்மையின்மை ஆகியவற்றை அப்படியே டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்வதால், சமத்துவமின்மைதான் பெருகும். வேறெந்த நன்மையும் கிடைக்காது.
பெலிண்டா லுஸ்கோம்ப்
டைம்
#philanthrophy #black gay men #inequality #analog #digital #ford foundation #philanthropists #time magazine #ford #prison abolitionist #darren walker
கருத்துகள்
கருத்துரையிடுக