இடுகைகள்

கார்பன்வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்

படம்
  cc உணவு இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும் அத