இடுகைகள்

நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ

படம்
  டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ shou zi chew டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.  உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.  டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.  டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீர்களா? நிறையப்பேர்

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருட

இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

படம்
  sly stone ஸ்லை ஸ்டோன்  அமெரிக்க இசைக்கலைஞர்  ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம்  தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்? மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது.  நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே? மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள் என்றொரு மூடநம்பிக்கை உ

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து

என்னுடைய விமர்சனம் நேரடியானது, கையால் செய்யும் ரொட்டிக்கு தனி சுவையுண்டு - பால் ஹாலிவுட்

படம்
  பால் ஹாலிவுட், சமையல் கலைஞர் பால் ஹாலிவுட் டிவி நிகழ்ச்சி நடுவர், எழுத்தாளர் தி கிரேட் பிரிட்டிஷ் பேக்கிங் ஷோ நிகழ்ச்சியில் முன்னர் இருந்ததை விட தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வசதிகள் அதிகரிப்பது சிறந்த சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அதிகரிக்கப்பட்ட வசதிகள், சமையல் கலைஞர்களின் திறனை வெளிக்காட்ட உதவும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி நட்பு சார்ந்த நிகழ்ச்சியாகவே இத்தனை ஆண்டுகாலமும் உள்ளது. எப்படி இதை சாத்தியப்படுத்தினீர்கள்? நான் சமையல் பற்றி கூறும் விமர்சன வார்த்தைகள் சிலநேரங்களில் கடுமையாக இருக்கும் என்பது உண்மை. நான் நேரடியாக என்ன விஷயமோ அதைக் கூறிவிடுவேன். பிற நிகழ்ச்சிகளில் அப்படியான நேரடியான விமர்சனம் இருப்பதில்லை. அவர்களுக்கு நெருப்பு பற்றவைப்பது என்பதெல்லாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதி. அவ்வளவுதான். பேக்கிங் செய்வது என்பது மக்களுக்கு ஆக்ரோஷமான ஒன்றாக தெரிவதை விட மென்மையாக தெரிவதை நான் விரும்புகிறேன். இந்தமுறை நிகழ்ச்சியில் உங்களுடன் ஆலிசன் ஹாமாண்ட் பங்கேற்கிறார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சமையல் கலைஞர்கள்தான் நிகழ்ச்சியின் நட்சத்த

பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

படம்
  கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி பத்திரிகையாளர் கரண் தாப்பர்  இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா? இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,   ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர். பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் கேள்விகளைப் பா

நிலவொளிரும் மலைகள் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் - ஆனந்த் மகிந்திரா

படம்
  மகிந்திரா நிறுவனம் நேர்காணல் ஆனந்த் மகிந்திரா முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதைப பற்றி தங்கள் கருத்து என்ன? 2007-2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. நிறைய பெரிய நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரு நிறுவனங்கள் என்றாலே நம்பிக்கை வைக்க முடியாது என நம்பத் தொடங்கினர். பிறகுதான், மெல்ல நிலைமை மாறியது. கோவிட் -19 ஏற்பட்ட காலம் மீண்டும் நிறுவனங்களுக்கு சோதனையான காலகட்டம். பெரிய நிறுவனங்கள் நடப்பு நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை. இதில் சில நிறுவனங்களிடம்தான் டிவி சேனல் அல்லது பத்திரிகைகள் உள்ளன.      நிறுவனத்தின் தேவை, லட்சியம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். முதலீட்டாளர்களுக்கும் விளக்கி விடுவது நல்லது. இப்படி எதையும் கூறாதபோது மக்கள் நிறுவனங்களை நம்ப மாட்டார்கள். இதனால் தொழில் சரிவுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்களுக்கு செலவிட்ட பணம் திரும்ப கிடைக்காது. சில நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் பெற முயல்கிறார்கள். ஆனால் நீ

அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

படம்
  ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal) பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா. பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.  டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல

வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன

படம்
                விட் ஈகிள்மேன் David eagleman நரம்பியல் அறிவியலாளர் , stanford university, california நமது மூளை இன்றும் கூட அதிசயமான பொருள் . அதில் கற்றல் எப்படி நடைபெறுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் கண்டறிய முயன்று வருகிறார்கள் . இப்படி மூளையில் பல்வேறு உணர்வுநிலைகளில் எப்படி கற்றல் நடைபெறுகிறது என டேவிட் ஆராய்ச்சி செய்துவருகிறார் .   மனிதர்கள் தாம் பெறும் அனுபவங்களைப் பொறுத்து மூளையின் மாறுதல்களைப் பற்றியதுதானே உங்களது ஆராய்ச்சி ? மூளையின் அமைப்பு மாறுவதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன் . இந்த துறையில்தான் நீங்கள் எனது பெயரைப் பார்க்க முடியும் . இப்படித்தான் என்னை நீங்கள் அடுத்தமுறை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும் . மூளையை தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருள் போல என்றுதான் நினைத்தார்கள் . ஆனால் நான் அதை லைவ் வயர்ட் என்ற அமைப்பாக பார்க்கிறேன் . அதாவது அனுபவங்களுக்கு ஏற்றபடி நிகழ்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது . இதன் வலிமை மாறிக்கொண்டே இருக்கும் . அதற்கேற்றாற்போல பிளக்குகளை பிடுங்கி வேறிடம் பொருத்திக