ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

 

 



 

 

 

சுந்தர் பிச்சை, கூகுளின் இயக்குநர். பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர். ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார். கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 2015ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார். சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம். கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு, ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது, சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது. அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம்.


கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே?


தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து ஆண்டு காலம் என்பது முக்கியமானதுதான். நீண்டகாலம் கூட. இது நிறுவனத்தை பிரதிபலிக்கிற தருணம். இது ஏஐ காலம். இந்த காலகட்டத்தில் நாங்கள் பொறுப்புணர்வோடு தொழில்நுட்பத்தை கையாள்கிறோம். ஆர்வத்தோடு குறையாத பொறுப்புணர்வோடு கூகுள் இயங்கி வருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றால் உருவானது. தற்போது புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்பு பெருகியிருக்கிறது. கண்டுபிடிப்புகளுக்கான பொற்காலத்தை பொறுப்போடு அணுகி வருகிறோம்.


ஐ தொடர்பான ஆராய்ச்சியில் கூகுள் தலைமைத்துவம் கொண்டதுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் சேவைகள் வேகம் பெறவில்லை. இந்த நேரத்தில் சிறு நிறுவனமான ஓப்பன் ஏஐயும் மைக்ரோசாஃப்டும் ஏஐ சேவைகளை ஒன்றாக சேர்ந்து வழங்கத் தொடங்கிவிட்டன. இனிமேல்தான் அவர்களை கூகுள் முந்தவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


நீங்கள் கூறியது சரிதான். 2015ஆம் ஆண்டு நான் இயக்குநராக பொறுப்பேற்ற பிறகு நியூரல் நெட்வொர்க்ஸ் விரைவிலேயே உலகை ஆளும் என அடையாளம் கண்டேன். இதற்காகவே நாங்கள் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கென அதிக செலவு செய்தோம். நாங்கள் லாஎம்டிஏ என்ற எல்எல்எம் மென்பொருளை பயன்படுத்துகிறோம். இதை வணிக ரீதியாக பயன்படுத்தும்போது சற்று முதிர்ச்சியானதாக இருக்கவேண்டுமென நினைத்தோம். மூன்று மாத குழந்தைக்கு டைலெனால் மருந்து எந்தளவு தரவேண்டும் என கூகுளில் மக்கள் கேட்கிறார்கள். இதை பொறுப்புணர்வாக பார்க்கிறேன். எனவே, ஏஐ பற்றி கவனமாக இருக்கவேண்டியது உள்ளது.


சாட் ஜிபிடி வெளியானது மூலம் மக்கள் அதை தெளிவாக புரிந்துகொள்வார்கள். இனி அதை பல்வேறு சேவைகளில் பயன்படுத்துவது எளிமையாக இருக்கும். ஏஐ தொடர்பான சேவைகளில் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடம் உண்டு. இந்த வகையில் கூகுள் இப்போதுள்ள இடம் பற்றி எனக்கு மகிழ்ச்சிதான்.


ஓப்பன் ஏஐக்கு முன்னதாகவே தேவையான கருவிகளும் ஆள் பலமும் கூகுளுக்கு உண்டு. சாட் ஜிபிடியை ஓப்பன் ஏஐ உருவாக்குவதற்கு முன்னதாகவே கூகுள் ஏதாவது ஏஐ தொடர்பாக உருவாக்கியுள்ளதா?


நாங்கள் செய்த பலவற்றையும் இப்போது பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியதிருக்கிறது. நாங்கள் உருவாக்கிய விஷயங்கள் சரியாக வேலை செய்யும் என தொடக்கத்தில் நம்பிக்கை வரவில்லை. அவை எப்படி வேலை செய்யும் என்பதை நிறைய மனிதர்களை வைத்து சோதிக்க வேண்டியதிருந்தது. இதற்கு செலவிட நேரும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் என்பது பெரிய விஷயமில்லை. நாங்கள் உண்மையான பிரச்னைகளை தீர்க்க நினைத்து ஆர்வத்துடனும் பொறுப்புடனும் வேலை செய்து வருகிறோம். இதைத்தான் நான் வாய்ப்பாக பார்க்கிறேன்.


சாட்ஜிபிடி மைக்ரோசாஃப்டின் சேவைகளில் இணைக்கப்பட்டபிறகு கூகுள் பார்ட் வெளியானது. சத்யா நாதெள்ளா, உங்களை இதுபோல செய்ய நெருக்கடிக்கு ஆட்படுத்தினாரா?


கிரிக்கெட்டில் ஒருவரின் பேட்தான் பேச வேண்டும். நாங்கள் ஆண்டுதோறும் தேடல் எந்திரத்திற்கு ஏஐயை பயன்படுத்தி மேம்படுத்தி வருகிறோம். அலெக்ஸா, சிரி என ஏராளமான நிறுவனங்கள் ஏஐயைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கி வருகின்றன. இது ஒன்றும் புதுமை கிடையாது. நீண்டகால நோக்கில் ஏஐயை எப்படி தேடலில் இணைக்கலாம் என யோசித்து வருகிறோம்.


தேடல் எந்திரத்தில் எஸ்ஜிஇயை இணைப்பதாக கூறுகிறீர்கள். அப்படி இணைத்தால் முன்னர் கிடைத்தது போல விளம்பர வருமானம் கிடைக்குமா?


தேடல் என்பதில் மக்கள் குறிப்பிட்ட தகவலைத் தேடித்தான் வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் கூகுளின் தகவல் தரும் முறையும் நிறைய மேம்பட்டுள்ளது. வணிகரீதியான தகவல்களைத் தேடுவது, விளம்பரம், தகவல்களின் வழியாக வணிகர்களை அணுகுவது என்பது மாறவில்லை. இதில் நாங்கள் ஏஐயை இணைப்பதால் எந்த மாறுதலும் ஏற்படாது. தொழில்நுட்பத்தின் வழியாக நாங்கள் மக்களை இணைப்பதுதான் இதில் முக்கியம்.


எல்எல்எம்மை தேடலில் இணைத்தால் வலைத்தள இணைப்புகளை விட வேறுபட்டதாகவே முடிவுகள் இருக்கும். இவை சரியானதா, விளம்பரதாரர் இணைப்பா என்ற எனக்கு எப்படி தெரியும்?


உங்களுக்கு ஏஐ மூலம் கிடைக்கும் முடிவுகளில் மாற்றமிருக்காது. தேடலில் அடிப்படையான அனுபவம் மாறாது. வணிகரீதியான தேடலுக்கு விளம்பரங்களை பயன்படுத்த முடியும். இதுபற்றிய எங்கள் சோதனையில் வெற்றிகரமான முடிவுகளே கிடைத்தன. கணினி, மொபைல் போன் என மாறும்போது கூட உங்களைப் போன்றே கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறு. தேடலில் ஏஐயை இணைப்பது என்பது முக்கியமான கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப்படவிருக்கிறது.


கூகுள் பிரெய்ன், டீப்மைண்ட் என இரு நிறுவனங்களையும் இணைக்கும் தேவை என்ன?


எங்களிடம் இரண்டு சிறந்த ஏஐ குழுக்கள் இருந்தன. அவை பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தன. இவை இரண்டுமே தொடர்ச்சியாக இணைந்து பல்வேறு வகையில் பணியாற்றிக்கொண்டிருந்தன. ஆல்பா கோ விளையாட்டிற்காக டிபியூவை உருவாக்கி வந்தது. இப்போது டீப் மைண்டின் ஜெமினி எல்எல்எம்மைப் பயன்படுத்தி இரு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன. ஜெமினி குழு, கூகுள் தேடலில் இணைந்து வேலை செய்து வருகிறது. தொடக்க கால கூகுளில் நான் இணைந்தபோது இருந்த ஆர்வத்தை இப்பணியில் பார்க்கிறேன். எழுத்து, புகைப்படம் என இருக்கும் வேறுபாட்டை ஜெமினி எல்எல்எம் மாற்றும்.


கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நாங்கள் எந்த செய்தியும் கேள்விப்படவில்லையே?


அதை எல்எல்எம் லாஎம்டிஏ பயன்படுத்தி மேம்படுத்தி வருகிறோம். ஏஐ மூலம் அசிஸ்டெண்ட் இன்னும் மேம்பட்ட தரத்தில் எதிர்காலத்தில் இயங்கும்.


தேடலில் கூகுள் எப்படி செயல்படுகிறது. அமெரிக்க அரசு தேடல் ஏகபோகத்துவம் பற்றி வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறதே?


புதிய கண்டுபிடிப்புகள் வரும் காலத்தின்போது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேடலை மேம்படுத்த ஆண்டுதோறும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஏஐ சார்ந்த ஏராளமான முயற்சிகள் மேம்பாடுகள் நடைபெற்று வருவதைப் பார்த்திருப்பீர்கள். தேடலுக்கு ஏராளமாக பணம் செலவு செய்து வருகிறோம். எதற்கு மக்கள் அதை எளிதாக பயன்படுத்தத்தானே? இது முக்கியமான செயல்பாடு.


அப்படியானால் நீங்கள் சந்தை பங்களிப்பு தாண்டி நீண்ட கால நோக்கில் பேசுகிறீர்களா?


இன்று அனைத்து மக்களும் எளிதாக செய்திகளை, தகவல்களை அணுகி வருகிறார்கள். இந்த இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஒருபடி முன்னே செல்ல முயன்று வருகிறோம்.


மூன்றாம் நபர்களின் இணைய உலாவிகளில் கூகுளின் தேடலை பயன்படுத்த அரசு அனுமதி மறுத்தால், அது உங்களை பாதிக்குமா?


மக்கள் எங்கள் சேவைகளை எளிதாக அணுகுவதற்கு முயன்று வருகிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான நிறுவனம்.



வயர்ட்

ஸ்டீபன் லெவி

wired, wall street journal


கருத்துகள்