தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

 

 


pita,move forward party

 

 

 

எங்களுக்கும் நேரம் வரும்


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார். பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். இவரது மாமா பாடுங், முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர்.


பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார். பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர், இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும். பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது. அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மக்களை, ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை.


அரசியல் எதிரிகள் இவரை அமெரிக்காவின் சிஐஏ இயக்குகிறது, அதனால்தான் ஜனநாயகம், பொருளாதார சீர்திருத்தம் பற்றி பேசுகிறார் என விமர்சிக்கிறார்கள். ஆனால் அவருக்கு எதிராக எதிர்ப்புகள் ஏன் கிளம்புகின்றன என்று பார்த்தால் ராணுவ சீர்திருத்தம், அரச குடும்பங்களை சட்டத்திற்குள் கொண்டு வருவது, தொழில்களில் ஏகபோகத்தை ஒழிப்பது என அவர் பேசும் பல்வேறு விஷயங்களும் தாய்லாந்து நாட்டின் மரபான ஆட்களுக்கு அரசியல்வாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியளித்து வருகிறது.


நாற்பத்து மூன்று வயதாகும் பிடா எதற்கும் அச்சம் கொள்வதில்லை. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசுகிறார். அரசியல்வாதிகள், அரச குடும்பம் என எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் மக்கள் அவரைக் கைவிடவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் மூவ் ஃபார்வர்ட் கட்சி ஓரளவுக்கு செல்வாக்கான அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.


பிடா பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு அவர் ராணுவத்துடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும். இதற்கு அவர் தயாராக இல்லை. ராணுவம் செனட்டர்களை நியமிக்கிற அதிகாரம் பெற்றுள்ளது. இவர்கள்தான் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். அதாவது வாக்களித்து ஆதரவு தெரிவிக்கலாம். தற்போது பியூ தாய் என்பவர் பிரதமராக இருக்கிறார். இவர் முன்னர் தக்ஷினோடு இணைந்து அரசியலில் இருந்தவர். இவருக்கு எதிராக எதிர்க்கட்சி வரிசையில் பிடாவின் மூவ் ஃபார்வேர்ட் கட்சி உள்ளது.


பிடாவை அரசியலில் இருந்து தடுக்க அரசு, அவர் தேர்தல் விதிகளை மீறி ஊடகம் ஒன்றின் பங்குகளை வைத்திருந்ததாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் அவரது நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதில் பிடாவுக்கு தண்டனை வழங்கப்பட்டால் அவர் பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார். இருபது ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.


ஏராளமான நெருக்கடிகள் சூழ உள்ள பிடாவை, நீதிமன்ற வழக்கில் வெல்வீர்கள் என நம்புகிறீர்களா என கேட்டால், ''தனிப்பட்ட ரீதியில் தொழில்ரீதியாகவும் நான் தவறு செய்யவில்லை என்ற ஆதாரம் உள்ளது. நீதிமன்ற நடைமுறை மீதி இன்னும் நம்பிக்கை உள்ளது. கட்சி தடை செய்யப்படுவது பற்றி பயப்படவில்லை. அதற்காக நாங்கள் அலட்சியமாக இருக்கமாட்டோம்'’ என்று கூறியிருக்கிறார்.


ரெபெக்கா ராட்கிளிப்

கார்டியன் நாளிதழ்

கருத்துகள்